சக்தித் தராதரங்கள் நிபந்தனைகளை வரையறை செய்கின்றன. இந்த நிபந்தனைகள் சக்திப் பாவனையினைத் திட்டவட்டமாகக் கட்டுப்படுத்தி சக்தி வினைத்திறனினை மேம்படுத்துவதைச் சாத்தியமாக்குகின்றன. ஒரு சக்தி முகாமைத்துவ முறைமையின் அறிமுகம், பராமரிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கான தேவைப்பாடுகளை அது வரையறை செய்கின்றது.
எனவே தராதரத்தி்னை அறிமுகப்படுத்தச் சக்தித் திட்டமிடல் செயன்முறை மேற்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்படவேண்டும். சக்தியுடன் தொடர்புடைய செயலாற்றுகையினைப் பாதிக்கும் சகல செயற்பாடுகளையும் செயன்முறை உள்ளடக்கவேண்டும்.
பின்வருபவை முக்கியமான விடயங்களில் சிலவாகும்:
தராதரத்திற்கு அமைவாக நாம் இதுவரையில் பின்வரும் ஒழுங்குபடுத்தல் உடன்படிக்கைகளுக்குப் பங்களிப்பு வழங்கியுள்ளோம்:
முழு விபரங்களை பார்வையிட திரையை நகர்த்தவும்
விபரம் | தராதர இலக்கம் | ஒழுங்குவிதி | முன்னேற்றம் |
---|---|---|---|
கம்பக்ட் புளோரசண்ட் லேம்ப்ஸ் (CFLs) | SLS 1225:2002 | 1611/10 of 22ndJuly 2009 | CFL இற்கான சக்தி லேபலிங்கிற்கான திருத்தப்பட்ட தராதரம் வெளியிடப்பட்டுள்ளது. |
கூரை மின்விசிறிகள் | SLS 1600: 2009 | 1794/15 of 22nd January 2013 | தராதரங்கள் உள்ளன. |
Ballasts | SLS 1200:2012 | 1971/12 of 15thJune 2016 | கட்டாய சக்தி லேபல்கள் உள்ளன. |
லீனியர் புளோரசண்ட் லேம்ப்ஸ் | SLS 1625: 2013 | 1971/12 of 15thJune 2016 | எல்ஈடி விளக்குகளுக்காக தன்னார்வ சக்தி லேபல் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. கட்டாய அடிப்படையில் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான வரைபு ஒழுங்குவிதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. |
குளிர்சாதனப் பெட்டிகள் | SLS 1230:2003 | N/A | தராதரங்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இதற்குச் சமாந்தரமாக ஆகக்குறைவான சக்திச் செயலாற்றுகைத் தராதரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன (MEPS). |
குளிரூட்டிகள் | இன்னும் வழங்கப்படவில்லை | N/A | சக்தி லேபலிடும் தராதரம் உருவாக்கப்பட்டு வருகின்றது. |
கணினிகள் | இன்னும் வழங்கப்படவில்லை | N/A | சக்தி லேபலிடும் தராதரம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தராதரங்கள் தயாரிக்கப்பட்டு இலங்கை தராதரங்கள் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் வெளியிடப்படும். |
எல்ஈடி | SLS 1530: 2016 | N/A | ஆகக்குறைந்த சக்திச் செயலாற்றுகைத் தராதரங்கள் உள்ளன. |
இலங்கையில் நிலையான எரிசக்தி வதிவிடங்களுக்கான வழிகாட்டுதல் இலங்கையில் எரிசக்தி பயன்பாட்டை உருவாக்குவது தொடர்பான தரங்களையும் விதிகளையும் பரிந்துரைக்க கிடைக்கக்கூடிய விதிகளின் கீழ் ஒரு துணை நடவடிக்கையாக தயாரிக்கப்பட்டது.