மின்சார உபகரணங்களுக்கு லேபலிடுவது சக்தி வினைத்திறனிற்கான கிராக்கியினை அதிகரிப்பதில் பாரிய வகிபாத்திரத்தினை வகிக்கின்றது. உபகரணங்களின் சக்தி வினைத்திறன் மற்றும் உபகரணங்களின் வினைத்திறன்மிக்க பயன்பாடு ஆகியவை சக்தி வினைத்திறனிற்கான இரண்டு பாரிய பங்களிப்புக்களாகும்.
வகைமாதிரியாக, சட்டத்தின் 35 (ஈ) மற்றும் (உ) வாசகங்களி்ன் கீழ் உபகரணங்களின் சக்தி வினைத்திறன் செயலாற்றுகையினை முன்னேற்றுவதற்கு உபகரண சக்தி லேபலிடும் நிகழ்ச்சித்திட்டம் பின்வரும் உதவிக் கருவிகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவற்றினைப் பயன்படுத்துகின்றது:
நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பத்தில் CFL விடயத்தினைக் கையாண்டது. தற்போது CFL இன் சக்தி லேபலிடல் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. அதன் பின்னர் கூரை மின்விசிறிகள் கையாளப்பட்டன. லேபலிடும் நிகழ்ச்சித்திட்டம் அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. LED விளக்குகளுக்கு ஆகக்குறைவான சக்திச் செயலாற்றுகை லேபல் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தன்னார்வ அடிப்படையிலானதாக அமைந்துள்ளது.
LED விளக்குகளில் கட்டாயமாக லேபலிடும் தேவைப்பாடுகள் மீதான ஒழுங்குவிதிகள் அடுத்த சில மாதங்களில் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கணினிகளுக்கான தன்னார்வ லேபலிடும் நிகழ்ச்சித்திட்டம் 2010 இன் ஆரம்பப் பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குழாய் புளோரசன்ட் விளக்குகள், மின் அழுத்தச் சீராக்கி, மின்சார மோட்டர்கள், குளிர்சாதனப் பெட்டிகள், அறைக் குளிரூட்டிகள் மற்றும் LED பெனல் விளக்குகள் போன்ற ஏனைய உபகரணங்களும் சக்தி பட்டியிலிடும் நிகழ்சித்திட்டத்தின் கீழ் கையாளப்பட்டு வருகின்றன.
நாம் தற்போது பின்வருவனவற்றில் ஈடுபட்டுள்ளோம்: