சக்தி வினைத்திறன் என்பது ஒரே வேலையினைச் செய்வதற்கு குறைந்த சக்தியினைப் பயன்படுத்துவதாகும். அதாவது சக்தி வீண் விரயமாக்கப்படுவதை அகற்றுவதாகும். சக்தி வினைத்திறன் பல்வேறு வகையான நன்மைகளைக் கொண்டு வருகின்றது: குடும்பங்களுக்கு ஏற்படும் செலவினைக் குறைத்து முழுப் பொருளாதாரத்தின் மீதான செலவினையும் குறைத்து பச்சை வீட்டு வாயு விளைவினையும் குறைக்கின்றது. இவற்றினை அடைந்துகொள்ள மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தொழில்நுட்பமும் உதவுகின்றது. சுவட்டு எரிபொருட்களின் பயன்பாட்டினைக் குறைப்பதற்கான மலிவான மற்றும் அனேக சந்தர்ப்பங்களில் மிகவும் உடனடியான வழி சக்தி வினைத்திறனினை மேம்படுத்துவதாகும். கட்டிடங்கள், போக்குவரத்து, தொழிற்துறைகள் அல்லது சக்தி விநியோகம் என்பவை போன்ற பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் வினைத்திறன் மேம்பாட்டிற்கான அபரிமிதமான வாய்ப்புக்கள் உள்ளன. சர்வதேச அணுசக்தி முகவரின் தகவலின்படி (2017) சக்தி வினைத்திறன் தொழில்நுட்பங்கள் 2060 ஆம் ஆண்டளவில் கரிம நடுநிலையினை அடைந்துகொள்வதை நோக்கி நிலைபெறுதகு முறையில் பங்களிப்பு வழங்கும்.
மீள்புதுப்பிக்கத்தக்கவைகளில் இருந்து உலகளாவிய கரியமில வாயுக் குறைப்புக்குக் கிடைக்கும் பங்களிப்பான 15 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில் சக்தி வினைத்திறன் தொழில்நுட்பங்களில் இருந்து உலகளாவிய கரியமில வாயுக் குறைப்புக்குக் கிடைக்கும் சாத்தியமான பங்களிப்பு 34 சத விகிதமாகும். சில குறிப்பிட்ட தூய்மையான சக்திப் பரப்புக்களில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நம்பிக்கை தருவதாக உள்ளது. ஆனால் பல தொழில்நுட்பங்கள் அவற்றின் உச்ச ஆற்றலை அடைவதற்கும் நிலைபெறுதகு சக்தி எதிர்காலத்தினை விநியோகிப்பதற்கும் இன்னும் உறுதியான உந்தலைத் தேவைப்படுத்துகின்றன.
இந்த அடைவுகளைத் தாண்டி உலகம் முழுவதும் 1.2 பில்லியன் மக்கள் மின்சார வசதியற்றவர்களாக உள்ளனர். அதேவேளை 2.7 பில்லியன் மக்கள் சமையலுக்குத் தூய்மையான சக்தியினைப் பெற முடியாதவர்களாக உள்ளனர். இன்று பச்சை வீட்டு வாயுவினை வெளியேற்றும் பாரிய மூலமாக சக்தித் துறை காணப்படுகின்றது. இது உலக மொத்தத்தின் சுமார் மூன்றில் இரண்டாகும். இதுவே வளி மாசாக்கத்திற்கான பாரிய மூலமாகவும் இருக்கின்றது. இதனால் வருடாந்தம் 6.5 மில்லியன் மக்கள் இளம் பராயத்தில் இறக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே 2060 ஆம் ஆண்டளவில் கரிம நடுநிலைமையினை அடைவது என்பது வினைத்திறன்மிக்க தொழில்நுட்பங்களில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிலான கொள்கை முன்னெடுப்புக்களையும் முதலீடுகளையும் தேவைப்படுத்தும். ஒவ்வொரு நாடும் நிலைபெறுதகு சக்தி எதிர்காலத்தினை நோக்கி அதற்கேயுரிய இடைமாற்றப் பாதையினை வரையறுக்கவேண்டும். மேலும் இலங்கை அதன் சக்தி வினைத்திறன் இலக்குகளை அடைவதற்காக நம்பிக்கையளிக்கும் பத்து தொழில்நுட்ப இடையீடுகளில் கவனம் குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தினைச் சரியாகத் தெரிவுசெய்துள்ளது.
ஆம், மூன்று இக்கட்டான நிலைகள் உள்ளன.
முதலாவதாக வருவது குடிசனவியல் சார்ந்த இயக்கவியல். 2020 ஆம் ஆண்டளவில் உலக ஜனத்தொகை வளர்ச்சி 7.5 பில்லியனை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் 2020 ஆம் ஆண்டளவில் உலகில் 27 பாரிய நகரங்கள் இருக்கும். ஒரு தனித்த பாரிய நகரமே 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டிருக்கும். இவை சக்திப் பயன்பாட்டில் கணிசமான அதிகரிப்பினை ஏற்படுத்தும்.
இரண்டாவதாக, சக்தி வளங்கள் அபரிமிதமானவையாக இருக்கின்றன. ஆனால் இவை சமமற்ற முறையில் விநியோகிக்கப்படுகின்றன. உலகின் 70 சதவிகித எண்ணெய் மற்றும் வாயு ஒதுக்கங்கள் சில நாடுகளிலேயே உள்ளன. இதனுடன் தளம்பல் நிலையினைக் கொண்ட சக்தி விலைகள் சேர்வதனால் சக்தி வினைத்திறனில் அதிகரித்த கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மூன்றாவதாக, காலநிலை மாற்றம் தூய்மையான சக்திக்கான கேள்வியினை அதிகரித்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகவரின் கருத்துப்படி மின்சாரத் துறையில் மாத்திரம் மேற்கொள்ளப்படும் சக்திச் சேமிப்பு கரியமில வாயு வெளியற்றத்தினை 2050 ஆம் ஆண்டளவில் 7.3 கிகா தொன்னாகக் குறைக்கும். இது வழமையான நடவடிக்கைகளைக் கொண்ட(BAU) சம்பவ நிலைகளுடன் தொடர்புடையது என்பதுடன் மனிதர்களின் செயற்பாட்டினால் ஏற்படும் மொத்த சுற்றாடல் மாசாக்க வாயுவெளியேற்றக் குறைப்பின் 17 சதவிகிதத்தினைப் பிரதிநித்துவம் செய்கின்றது.
சக்திப் பயன்பாடு ஒரு நோக்கத்துடன் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகையில் பயன்பாட்டு நுகர்வில் சக்தியின் பயன்பாடு குறைவடைகின்றது என்றும் வசதிகளின் இயக்கங்களைத் தியாகம் செய்யாமல் ஒட்டுமொத்தச் செலவுகளை நிறைவேற்ற முடியும் என்றும் நாம் நம்புகின்றோம். இவ்வாறான சக்தி முகாமைத்துவ உத்திகள் பல வடிவங்களையும் பல அளவுகளையும் எடுக்கலாம்.
11 பில்லியன் இலங்கை ரூபாவினை முதலீடு செய்வது இலங்கைக்கு வருடாந்தம் 3 பில்லியன் ரூபா பெறுமதியுடைய சக்தியினைச் சேமித்துக் கொடுக்கும் என நாட்டின் சக்தி வினைத்திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆற்றல் தொடர்பாக 2004 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு (EEI&C) சுட்டிக்காட்டுகின்றது. வர்த்தக, கைத்தொழில் மற்றும் உள்நாட்டுத் துறைகளில் சக்தியினைச் சேமிப்பதற்கு சிறந்த சக்தி முகாமைத்துவ நடைமுறைகளுக்கு அமைவாக நாம் பத்து புதிய உபாயமார்க்கங்களை உருவாக்கியுள்ளோம்.