ஸ்மார்ட்டாக ஆடை அணிதல்
உங்கள் ஆடைகளைத் துவைப்பது என்பது வீட்டில் மிக அதிக சக்தி நுகர்வினை ஏற்படுத்தும் செயல் என்பதை நீங்கள் உணராது இருக்கலாம். உங்களின் ஆடைகளைத் துவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீரினைச் சூடாக்குவதற்கும் ஆடைகளைக் கழுவுவதற்கும் அதனைக் காயவைப்பதற்கும் மிக அதிக சக்தி தேவைப்படுகின்றது!
மிகச் சிறந்தவற்றினை நாடல்
சிறந்த இஸ்திரிப் பெட்டிகளை (அயர்ன்) கொள்வனவு செய்வதற்கான ஆலோசனைகள்
சிறந்த துணி துவைக்கும் இயந்திரத்தினைக் கொள்வனவு செய்வதற்கான ஆலோசனைகள்
பகுதியான தன்னியக்கமிக்க மற்றும் பூரண தன்னியக்கமிக்க இயந்திரங்கள் 230 முதல் 725 வெற்களைப் பயன்படுத்துகின்றன. துணிகளை முழுவதுமாக நிரப்பினாலும் நிரப்பாவிட்டாலும் பூரணமான தன்னியக்க இயந்திரம் 30 முதல் 45 நிமிடங்கள் ஓடி, சகல செயற்பாடுகளையும் முடித்து பொதுவாக 4.5 முதல் 5 கிலோ உடுப்புக்களைத் துவைக்கின்றது. ஆனால் பகுதியான தன்னியக்கத்தினைக் கொண்ட இயந்திரம் 16 நிமிடங்கள் ஓட்ட நேரத்தினைக் கொண்டுள்ளதுடன் 3 முதல் 5 கிலோ வரையில் மாத்திரம் துவைக்கக்கூடியதாகும். ஒரு தடவை துவைக்கையில் 5 – 6 கிலோ உடுப்புக்களைத் துவைக்கக்கூடிய ஆற்றல் கொண்ட இயந்திரமே நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்குச் சிறந்த இயந்திரமாகும்.
துணிகளை இயந்திரத்தின் முன்பக்கம் இடக்கூடிய இயந்திரத்தினை வாங்குங்கள். இவற்றின் அதிகரித்த ஆற்றல் ஒரே தடவையில் அதிக துணிகளைத் துவைப்பதைச் சாத்தியமாக்குகின்றது.
மத்திய அஜிட்டேட்டர் இல்லாத இயந்திரத்தினை வாங்கவும். அஜிட்டேட்டர்கள் துவைக்கும் சுற்றின் போது அதிக சக்தியினை எரிக்கின்றன. மேலிருந்து துணிகளைச் செலுத்தும் மாதிரிகள் இவற்றினைக் கொண்டிருக்கலாம்.
அயன் செய்தல்
ஆரம்பத்திலேயே தொடங்கவும். அயன் பண்ணுவதைப் பெரிதாகத் தேவைப்படுத்தாத அல்லது தேவைப்படுத்தாத ஆடைகளை வாங்க முயற்சிக்கவும்.
படுக்கை அறையில் அயன் செய்யவும். ஆடைகளை வகை பிரிக்க உங்களின் கட்டிலைப் பயன்படுத்தலாம். உங்களுக்கருகில் ஹெங்கர்களை வைத்திருக்கவும்.
சகல ஆடைகளையும் ஒரேயடியாக அயன் செய்யவும். முதலில் நுண்மையான துணிகளில் ஆரம்பித்துப் பின்னர் தடித்த பருத்திக்குச் செல்லவும். இவ்வாறு தொடர்கையில் வெப்பநிலையினை அதிகரிக்கலாம்.
அயன் செய்யும் பலகையின் கீழே மெல்லிய அலுமினியத் தாள் துண்டொன்றினை வைக்கவும். அலுமினியத் தாள் வெப்பத்தினைப் பிரதிபலிக்கும். இதனால் ஒரே தடவையில் ஆடையின் இரு பக்கங்களையும் அயன் செய்ய முடியும். குறைவான வெப்ப நிலை தேவைப்படும் ஆடையில் இருந்து உயர் வெப்ப நிலை தேவைப்படும் ஆடைக்குச் செல்லவும்.
இரட்டைத் தடிப்புக் கொண்ட துணியின் உட்பக்கத்தினை முதலில் அயன் செய்து அதன் பின்பு வெளிப்பக்கத்தினை அயன் செய்யவும்.
பூவேலைப்பாடு / நுண்துளைகள் தட்டையாகுவதைத் தடுக்க அவற்றினை மறுபக்கமாகப் புரட்டித் தடித்த துவாலையின் மீது வைத்து அயன் செய்யவும்.
நீராவி இஸ்திரிப் பெட்டிக்கு வடித்திறக்கிய நீரினைப் பயன்படுத்தவும். இது அதன் ஆயுட்காலத்தினை அதிகரிக்கும்.
அடைத்துக்கொண்ட நீராவி அயன்கள் போதிய அளவு நீராவியினை வெளிவிடுவதில்லை. அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும். உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
அயனின் அடிப்பகுதியினைச் சுத்தம் செய்ய புதிய வாழைப்பழத் தோல் மீது அயன் செய்யவும். ஓட்டைகளில் உள்ள அழுக்கினை அகற்ற தூய பஞ்சினைப் பயன்படுத்தவும். கூரான பொருட்களைப் பயன்படுத்தவேண்டாம்.
அயன் செய்யும்போது அயன் பெட்டியினை நிலைக்குத்தாக வைக்கவும்.
துணி துவைக்கும் இயந்திரங்கள்
பகுதியான தன்னியக்கமிக்க மற்றும் பூரண தன்னியக்கமிக்க இயந்திரங்கள் 230 முதல் 725 வெற்களைப் பயன்படுத்துகின்றன. துணிகளை முழுவதுமாக நிரப்பினாலும் நிரப்பாவிட்டாலும் பூரணமான தன்னியக்க இயந்திரம் 30 முதல் 45 நிமிடங்கள் ஓடி, சகல செயற்பாடுகளையும் முடித்து பொதுவாக 4.5 முதல் 5 கிலோ உடுப்புக்களைத் துவைக்கின்றது. ஆனால் பகுதியான தன்னியக்கத்தினைக் கொண்ட இயந்திரம் 16 நிமிடங்கள் ஓட்ட நேரத்தினைக் கொண்டுள்ளதுடன் 3 முதல் 5 கிலோ வரையில் மாத்திரம் துவைக்கக்கூடியதாகும்.
பின்வருவனவற்றினைத் தெரிந்திருங்கள்: