சாதாரன வீடொன்றில் ஒளியூட்டலுக்கு 15% மின்சாரம் தேவைப்படுகின்றது. எனவே வினைத்திறன்மிக்க ஒளியூட்டலில் முதலீடு செய்வது பெரும் சேமிப்புக்கு வழிவகுக்கின்றது. நீங்களே வித்தியாசத்தினைக் கண்டுபிடியுங்கள்.

15 வெற் கம்பக்ட் புளோரசன்ட் விளக்கு 75 வெற் மின் இழைகளைக் கொண்ட மின்குமிழ் தரும் வெளிச்சத்திற்குச் சமமான வெளிச்சத்தினை வழங்குகின்றது. இருப்பினும் இரண்டு மின்விளக்குகளும் உங்களது மின்சாரக் கட்டணப் பட்டியலை வித்தியாசமாகப் பாதிக்கின்றன.

மாதமொன்றிற்கு இரண்டு மின்விளக்குகளும் நாளாந்தம் நான்கு மணித்தியாலங்கள் ஒளிர்ந்தால் செலவானது

வெற் அளவு அதிகமானதாக இருந்தால் மின்சாரக் கட்டணமும் உயர்வானதாக இருக்கும்

 

சிஎப்எல் பல்புகளும் எல்ஈடி பல்புகளும் சக்தியினைச் சேமிக்கும் சாதனங்களாகும்.

  • சிஎப்எல் பல்பொன்று மின் இழையினைக் கொண்ட மின்குமிழுக்குத் தேவைப்படும் சக்தியில் ஐந்தில் ஒரு பங்கினை மாத்திரமே பயன்படுத்துகின்றது.
  • அவை செலவுச் சிக்கனமானவையாகும்
  • உயர் வினைத்திறன் கொண்டது – உயர் வெளிச்சத்தினை வழங்குகின்றது
  • மின் இழை கொண்ட மின்குமிழினை விட 6 - 12 மடங்கு நீண்ட பயன்பாட்டுக் காலத்தினைக் கொண்டுள்ளது
  • சுற்றாடலுக்குத் தீங்கு விளைவிக்காதது. ஏனெனில் நீண்ட காலம் நிலைத்திருப்பதால் குறைவாகவே அகற்றப்பட வேண்டியுள்ளது.

இந்த விளக்குகள் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் நிறங்களிலும் உங்களது விருப்பத்திற்கேற்பக் கிடைக்கின்றன. விளக்கின் நிறமானது விளக்கினால் உமிழப்படும் ஒளியின் நிறத் தோற்றத்தின் விளக்க விபரத்தில் (CCT) தங்கியுள்ளது. விளக்கின் வெள்ளை ஒளியின் அளவு டிகிரி கெல்வினில் அளக்கப்படுவதை இது குறிக்கின்றது. CCT உயர்வானதாக இருக்கையில் அது பொருளினை அதிக நீலம் கலந்த வெள்ளை நிறமுடையதாக ஆக்குகின்றது. அதேவேளை CCT குறைவானதாக இருந்தால் அது பொருளினை சிவப்புக் கலந்த வெள்ளை நிறமுடையதாக ஆக்குகின்றது. சூடான விளக்கு பொதுவாக 5000 கெல்வினுக்குக் குறைவான நிற வெப்பநிலையினைக் கொண்டுள்ளது. குளிரான வெப்பநிலையானது 3200 கெல்வினுக்கு மேற்பட்டதாகும். மின் இழையினைக் கொண்ட மின்குமிழ் 2800 கெல்வின் CCT யினைக் கொண்டுள்ளது.

நாம் சரியான விளக்கினைத் தெரிவுசெய்து அதன் ஒளியினைச் சரியான இடத்தில் படச் செய்யவேண்டும். வித்தியாசமான அறைகளும் அமைப்புக்களும் வெவ்வேறு ஒளியூட்டல் மட்டங்களைத் தேவைப்படுத்துகின்றன.

பின்வரும் அட்டவணையானது அடிக்கடி பயன்படுத்தப்படும் சில இடங்களின் ஒளியூட்டல் மட்டங்களை உங்களுக்கு வழங்குகின்றது.

பயன்பாடு Lumens/m3
உட்காரும் அறை 50
வாசிப்பறை 300
சமையலறை 200
குளியலறை 100
நுழைவாயில் 100
அலுவலகம் 200
கராஜ் / வெளிப்புறம் 50

வாசித்தல், எழுதுதல் மற்றும் தைத்தல் போன்ற செயற்பாடுகள் உயர் மட்டத்திலான ஒளியூட்டலைத் தேவைப்படுத்துகின்றன. எவ்வாறாயினும் தொலைக்காட்சி பார்த்தல் மற்றும் உணவருந்துதல் போன்றவை அதிக ஒளியினைத் தேவைப்படுத்துவதில்லை.

உங்களது இடத்திற்கு வினைத்திறன் மிக்க ஒளியூட்டலை வழங்குவதில் உரிய கவனத்தினைச் செலுத்தும் அதேவேளை ஒளியூட்டலுக்காக பல்வேறு ஒளியூட்டல் முறைமைகளை நீங்கள் பயன்படுத்த முடியும். சில பொதுவான பிரயோகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஒளியூட்டல் முறைமைகள் பயன்படுத்தப்படக்கூடிய பிரதேசங்கள்
தொங்கும் ஒளியூட்டல் நீண்ட வளைக்கக்கூடிய பிளாஸ்டிக் குழாயில் சிறு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தூசி தட்டுதல் கடினமானதாக உள்ள இடங்களில் இவற்றினைப் பயன்படுத்தலாம். இதற்கு மிகச் சிறிய அளவு வெளிச்சமே தேவைப்படுகின்றது. கெபினெட்டின் மேற்பகுதி போன்ற இடங்களில் இதனைப் பயன்படுத்தலாம்.
அலுமாரி விளக்குகள் இவை ஹெலோஜென் விளக்குகளாகும். இவை வட்ட வடிவிலான அல்லது ஓவல் வடிவிலான கெபினெற் விளக்குகள் அல்லது சிறிய டிரக் விளக்குகளாகும். இது திறந்த அல்லது கண்ணாடி முன்பகுதியினைக் கொண்ட கெபினெற்றுக்களில் பயன்படுத்தப்படலாம்.
கீழ் விளக்குகள் இவை வேலை செய்யும் பிரதேசங்களைப் பிரகாசமாக்குகின்றன. அதாவது சமையல் மேசை போன்ற இடங்கள்
உலோகங்கள் இவை மிதமான தோற்றத்தினைக் கொண்டுள்ளதுடன் உலோகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன அல்லது கலப்புலோகங்கள், துருப்பிடித்த இரும்பு, வார்ப்பிரும்பு, நிக்கல், வெண்கலம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை போன்று வர்ணம் பூசப்பட்டுள்ளன. இவை அதிகமாக சமையலைறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
பிரகாசத்தினைக் குறைக்கும் சுவிச்சுகள் இது பிரகாசத்தினைக் குறைத்து இதமான மனோநிலையினை உருவாக்க அனுமதித்து மின்சாரத்தினைச் சேமிக்கின்றது.
கண்ணாடி மணிகளைக் கொண்ட சேட்கள் இந்த வகையில் ஒவ்வொரு மணியும் சிறிய அளவில் ஒளியினைப் பிடித்து ஒளிர்கின்றது
பெண்டன்ட் விளக்குகள் இது சங்கிலியில் பொருத்தப்பட்டு கூரையில் இருந்து தொங்கவிடப்படுகின்றது
மீளுற்பத்தி பொருத்துகைகள் இவை கலைப் பொருட்கள் நிறைந்த இல்லம் போன்ற தோற்றத்தினை வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன அல்லது 19 ஆம் நூற்றாண்டுக் காலத் தளபாட வடிவங்களுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன.
வட்டச் சுவர் விளக்குகள் மண்டபங்கள் அல்லது படிக்கட்டுக்களுக்கு ஒளியூட்டப் பயன்படுத்தப்படும் அரை நிலா வடிவினைக் கொண்ட விளக்குகள்
உட்பதிக்கப்பட்ட விளக்குகள் கூரையின் உயரம் 2.5 மீற்றருக்குக் குறைவானதாக இருக்கையில் இவை பயன்மிக்கதாகும் என்பதுடன் பொருத்துகைகள் கீழே தொங்காமல் இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் இவை விரும்பப்படுகின்றன
தரை விளக்குகள் இவை மேல்நோக்கிய தரை விளக்குகளாகும். இதனால் இவை கண்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாது அதிக வெளிச்சத்தினை வழங்குகின்றன.

 

ஒளியூட்டலுக்கான சிறந்த நடைமுறைகள்

இடம் நடைமுறை
குளியலறை
  • ஒளிரக்கூடியவற்றில் இருந்து பெறும் பொதுவான ஒளியூட்டல், கண்ணாடியினைச் சுற்றிப் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள்
  • மிகச் சிறந்த நிறத்தினையும் வடிவத்தினையும் பெற ஸ்பொட் விளக்குகள்
  • நீர், நீராவி, நீர்த் திவலைகள் ஆகியவற்றினால் பாதிப்படையாத கயிற்றினை இழுத்து இயக்கும் ஆளிகள்
படுக்கையறை
  • ஆளுயரக் கண்ணாடிகள் மற்றும் ஆடை அலுமாரி ஆகியவற்றிற்குப் பிரகாசமான விளக்குகள்
  • படுக்கையினைச் சுற்றி வாசிப்பதற்கான விளக்குகள்
  • வடிவமைப்பினைச் செழுமைப்படுத்தவும் மனநிலையினை மேம்படுத்தவும் மிருதுவான தன்மை கொண்ட விளக்குகள்
  • ஒளியூட்டலின் தீவிரத்தன்மையினை மாற்றுவதை இயலுமாக்கும், ஒளியினைக் குறைக்கும் ஆளியுடன் பொருத்தப்பட்ட, தலைக்கு மேல் தொங்கும் ஒளியூட்டல்
உணவறை
  • வெள்ளை நிறமான அல்லது சுவரின் நிறத்தினை அதிகரிக்கின்ற நிறத்தின் சாயலைக் கொண்ட மிருதுவானதும் இதமானதுமான விளக்குகள்
  • விருப்பத்துக்குரிய ஓவியம் அல்லது அலங்காரத்தினை மேம்படுத்திக் காட்டுவதற்கான ஸ்பொட் விளக்குகள்
  • அலுமாரிக்கு உள்ளே பொருத்தப்படும் சிறிய ஹெலோஜென் விளக்குகள் போன்ற குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் ஒளி வழங்கும் விளக்குகள்
  • சந்தர்ப்பத்திற்கு அல்லது பணிக்குப் பொருத்தமாக ஒளியூட்டல் மட்டங்களைச் சீர்படுத்துவதற்கு ஒளியினைக் குறைக்கும் ஆளிகளை வழங்கல்
தாழ்வாரங்கள் மற்றும் படிக்கட்டுக்கள்
  • அதிகமான சந்தர்ப்பங்களில் ஒளிரவேண்டிய இடங்களில் உள்ள விளக்குகள் போன்ற சக்தியினைச் சேமிக்கும் விளக்குகள்
  • வரவேற்கின்ற உணர்வினை வழங்குவதற்காக தாழ்வாரத்தின் முடிவில் தரையினை ஒளிவெள்ளமாக்கும் ஒளியூட்டல்
  • பயங்கரமான நிழல்களைத் தவிர்ப்பதற்காக படிக்கட்டுக்களில் ஸ்பொட் லைட்டுகளைப் பயன்படுத்தாமை
சமையலறை
  • அடிப்படைப் பின்னணி வெளிச்சத்திற்காக உட்பதிந்த கூரை விளக்குகள்  அல்லது மேல் விளக்குகள்
  • வேலை செய்வதற்குத் தேவையான பிரகாசமான ஒளியினை வழங்குவதற்காக வேலை மேசைக்கு நீண்ட குழாய் வடிவிலான விளக்கினால் ஒளியூட்டல்
  • இயற்கை ஒளி போன்று தோற்றமளிக்க சுவரில் பொருத்தப்பட்டுள்ள அலகுகளின் கீழ் ஒளி உமிழும் விளக்குகளை மறைத்தல்
லிவிங் ரூம்
  • ஒளியூட்டல் முறைமையினை அடுக்குகளின் தொடராகக் கருதுதல்
  • எங்கே மற்றும் எப்போது தேவைப்படுகின்றதோ அங்கே, அப்போது விளக்குகளை வழங்க பக்க விளக்குகளை அல்லது மேசை விளக்குகளைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனமானதாகும்.
  • உண்மையான அழகினையும் நேர்த்தியினையும் கொண்ட உணர்வினை வழங்க ஸ்பொட் விளக்குகளைப் பயன்படுத்தலாம்
வேலை அறைகள்
  • விரிவான வேலை அல்லது பொழுதுபோக்குக்களுக்கு பிரகாசமான வெள்ளை ஹெலோஜென் ஒளியூட்டல்
  • விசைப் பலகையுள்ள (கீ போட்) இடத்தினைப் பிரகாசப்படுத்த போதிய தலைக்கு மேலான ஒளியூட்டல்
  • கண்களைக் கூசவைக்கும் கணினிகளின் ஒளி மற்றும் திரையில் பிம்பம் தெரிதல் ஆகியவற்றினைத் தவிர்த்தல்
call to action icon