"

Our Vision is spearheaded by the National Energy Policy and Strategies of Sri Lanka. Our aim is to achieve energy security by improving energy efficiency and increasing the usage of indigenous energy resources.

"

சக்திப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்

நிலக்கரியில் இருந்து எண்ணெய்க்கு மாறிய நாள் முதல் சக்திப் பாதுகாப்பு என்பது தேசிய உபாயமார்க்கத்தின் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. எவ்வாறாயினும், சமூக – பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் விளைவுகளைக் கொண்ட நிச்சயமற்ற எண்ணெய் விநியோகம் மீது ஒரு வகையில் குறைந்த அளவில் தங்கியிருத்தலுக்கு சக்திப் பாதுகாப்புக் கருத்தியல் மாற்றமடைந்துள்ளது. மேலும் இறக்குமதி செய்யப்படும் எண்ணெயில் பெருமளவிற்குத் தங்கியிருப்பது என்பது பாரிய வெளிநாட்டுச் செலாவணிச் செலவினையும் விலைகூடிய சக்தியினையும் உற்பத்தியின் உயர் செலவினையும் குறைந்த போட்டித்தன்மையினையும் உயர் கரியமில வாயு வெளியேற்றத்தினையும் இன்னும் பல விளைவுகளையும் ஏற்படுத்தும். இறக்குமதி செய்யப்படட எரிபொருளில் தங்கியிருத்தலைக் குறைத்தல், மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்காக சக்தி மூலங்களைப் பல்வகைமைப்படுத்துதல் ஆகியவை சக்திப் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கான முக்கியமான கொள்கைப் பாதையாகும். இது மாசாக்கும் வாயு வெளியேற்றத்தினைக் குறைத்து பொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்தும். சிறிய மற்றும் நடுத்தர அளவில் அமுல்படுத்துவது மீள்புதுப்பித்தலின் முக்கியமான அம்சமாகும் என்பதுடன் இது தேசிய மின்சார வலையமைப்பிற்கு வெளியேயான தீர்வாகவும் ஏற்று நடைமுறைப்படுத்தப்பட முடியும். இந்தக் கண்ணோட்டத்தினை மனதிற்கொண்டு நிலைபெறுதகு அதிகாரசபை இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த மூலங்களில் இருந்து மலிவான மீள்புதுப்பிக்கத்தக் சக்தி மூலத்திற்குத் தனது கவனக் குவிப்பினை மாற்றியுள்ளது. இதன் மூலம் நாட்டில் சமூக – பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைபெறுதகு தன்மையும் ஏற்படும்.

உறுதியான கொள்கைகளை உருவாக்குதல், அறிவினைச் செயற்திறன்மிகு முறையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் சந்தை மற்றும் முறைமைகளை நிலைமாற்றுதல் ஆகியவற்றிலேயே சக்திப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பெருமளவில் தங்கியுள்ளது. இக்கொள்கைகளின் செயற்திறன்மிக்க அமுல்படுத்தலுடன் இலங்கை கிட்டிய எதிர்காலத்தில் நவீன சக்தி மூலங்களின் பாவனைக்கு நிலைமாறும் என நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை எதிர்பார்க்கின்றது.

சுதேச சக்தியினை அதிகரித்தல்

நீடுறுதியான பொருளாதாரத்தி்னை அடைவதற்காக உலகம் முழுவதிலும் உள்ள பொருளாதாரங்கள் உயர் சக்திக் கிராக்கிக்கு முகங்கொடுக்கின்றன. எவ்வாறாயினும் அதிகரிக்கும் கிராக்கியினைப் பூர்த்தி செய்வது மாத்திரமல்லாது பாதகமான சுற்றுச் சூழல் தாக்கத்தினை ஏற்படுத்திவரும் அருகிவரும் சுவட்டு எரிபொருள் மீது குறைந்தளவில் தங்கியிருத்தலும் சவால்மிக்கதாக இருந்து வருகின்றது. தளம்பல் மிக்க சுவட்டு எரிபொருளின் விலை இயக்கவியலும் மின்சாரத்தின் கேள்விக்கும் விநியோகத்திற்கும் இடையிலான விரிவடையும் இடைவெளியும் செலவுச் சிக்கனமிக்க, சுற்றாடலுக்குத் தீங்கற்ற மற்றும் நம்பத்தகுந்த சக்தி வளங்களுக்கான தேவையினை வலுவாக்கிவருகின்றன. இக்காரணிகள் மீள்புதுப்பிக்கத்தக்க வளங்களை உருவாக்குவதில் அதிகரித்த ஆர்வத்திற்குக் காரணமாகியுள்ளன.

மின்சாரம், போக்குவரத்து மற்றும் உள்நாட்டுத் துறைகள் உள்ளிட்ட சகல பரப்புக்களிலும் தேசத்தின் சக்தித் தேவையில் குறைந்தது 10 சத விகிதத்தினை மரபு சாராச் சக்தி மூலங்களில் இருந்து பெறுவதை வசதிப்படுத்துவதை அதிகாரசபை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சக்தியினை உக்கிரமாகத் தேவைப்படுத்தும் பொருளாதாரத்தின் கிராக்கியினைச் செயற்திறனுடன் முகாமைத்துவம் செய்தல்

நுகர்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கையில் இலங்கையின் சக்தித் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன – கடந்த இருபது வருடங்களில் இது கணிசமான அதிகரிப்பினைக் காட்டுகின்றது.  பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் அதேவேளை சக்திக்கான அதிகரித்துவரும் எதிர்காலக் கிராக்கியினைப் பூர்த்திசெய்வதற்கு நாட்டின் சக்திக் கலப்பில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியின் அதிகரிக்கும் பங்கு உதவலாம் என்பதை நாம் நம்புவதற்கு நடத்தப்பட்ட ஆய்வுகள் இட்டுச் செல்கின்றன. சுவட்டு எரிபொருளுடன் தொடர்புபட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்கத்தினைக் குறைப்பது போலவே சக்தி மூலங்களின் பல்வகைமையினை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் அதிகரிக்கலாம் என்பதுடன் அவை எதிர்காலத்தில் சக்திப் பாதுகாப்புக்குப் பங்களிப்பு வழங்கி சக்தி விநியோகம் நீண்டகாலத்திற்குக் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றமைக்கும் பங்களிப்பு வழங்கலாம். அபிவிருத்தி அடையாத பரப்புக்களில் மரபுரீதியான சக்தி மூலங்களைப் பயன்படுத்தாது மீள்புதுப்பி்க்கத்தக்க சக்தி மூலங்களைப் பயன்படுத்தலாம் என்பதாலும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புபட்டுள்ள செலவினைக் குறைக்கலாம் என்பதாலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் அபிவிருத்தியினையும் மேம்படுத்தலாம்.

இலங்கையில் துரித தொழிற்துறை வளரச்சி பற்றிய மற்றும் அதனுடன் தொடர்புபட்டுள்ள சக்திக் கிராக்கி பற்றிய எதிர்வுகூறல்களை மனதிற்கொண்டு இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை பொருளாதாரத்தின் சக்தித் தீவிரத்தினை எதிர்காலத்தில் 500toe/XDRM எனப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

call to action icon