சாதாரன வீடொன்றில் ஒளியூட்டலுக்கு 15% மின்சாரம் தேவைப்படுகின்றது. எனவே வினைத்திறன்மிக்க ஒளியூட்டலில் முதலீடு செய்வது பெரும் சேமிப்புக்கு வழிவகுக்கின்றது. நீங்களே வித்தியாசத்தினைக் கண்டுபிடியுங்கள்.
15 வெற் கம்பக்ட் புளோரசன்ட் விளக்கு 75 வெற் மின் இழைகளைக் கொண்ட மின்குமிழ் தரும் வெளிச்சத்திற்குச் சமமான வெளிச்சத்தினை வழங்குகின்றது. இருப்பினும் இரண்டு மின்விளக்குகளும் உங்களது மின்சாரக் கட்டணப் பட்டியலை வித்தியாசமாகப் பாதிக்கின்றன.
மாதமொன்றிற்கு இரண்டு மின்விளக்குகளும் நாளாந்தம் நான்கு மணித்தியாலங்கள் ஒளிர்ந்தால் செலவானது
வெற் அளவு அதிகமானதாக இருந்தால் மின்சாரக் கட்டணமும் உயர்வானதாக இருக்கும்
சிஎப்எல் பல்புகளும் எல்ஈடி பல்புகளும் சக்தியினைச் சேமிக்கும் சாதனங்களாகும்.
இந்த விளக்குகள் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் நிறங்களிலும் உங்களது விருப்பத்திற்கேற்பக் கிடைக்கின்றன. விளக்கின் நிறமானது விளக்கினால் உமிழப்படும் ஒளியின் நிறத் தோற்றத்தின் விளக்க விபரத்தில் (CCT) தங்கியுள்ளது. விளக்கின் வெள்ளை ஒளியின் அளவு டிகிரி கெல்வினில் அளக்கப்படுவதை இது குறிக்கின்றது. CCT உயர்வானதாக இருக்கையில் அது பொருளினை அதிக நீலம் கலந்த வெள்ளை நிறமுடையதாக ஆக்குகின்றது. அதேவேளை CCT குறைவானதாக இருந்தால் அது பொருளினை சிவப்புக் கலந்த வெள்ளை நிறமுடையதாக ஆக்குகின்றது. சூடான விளக்கு பொதுவாக 5000 கெல்வினுக்குக் குறைவான நிற வெப்பநிலையினைக் கொண்டுள்ளது. குளிரான வெப்பநிலையானது 3200 கெல்வினுக்கு மேற்பட்டதாகும். மின் இழையினைக் கொண்ட மின்குமிழ் 2800 கெல்வின் CCT யினைக் கொண்டுள்ளது.
நாம் சரியான விளக்கினைத் தெரிவுசெய்து அதன் ஒளியினைச் சரியான இடத்தில் படச் செய்யவேண்டும். வித்தியாசமான அறைகளும் அமைப்புக்களும் வெவ்வேறு ஒளியூட்டல் மட்டங்களைத் தேவைப்படுத்துகின்றன.
பின்வரும் அட்டவணையானது அடிக்கடி பயன்படுத்தப்படும் சில இடங்களின் ஒளியூட்டல் மட்டங்களை உங்களுக்கு வழங்குகின்றது.
பயன்பாடு | Lumens/m3 |
---|---|
உட்காரும் அறை | 50 |
வாசிப்பறை | 300 |
சமையலறை | 200 |
குளியலறை | 100 |
நுழைவாயில் | 100 |
அலுவலகம் | 200 |
கராஜ் / வெளிப்புறம் | 50 |
வாசித்தல், எழுதுதல் மற்றும் தைத்தல் போன்ற செயற்பாடுகள் உயர் மட்டத்திலான ஒளியூட்டலைத் தேவைப்படுத்துகின்றன. எவ்வாறாயினும் தொலைக்காட்சி பார்த்தல் மற்றும் உணவருந்துதல் போன்றவை அதிக ஒளியினைத் தேவைப்படுத்துவதில்லை.
உங்களது இடத்திற்கு வினைத்திறன் மிக்க ஒளியூட்டலை வழங்குவதில் உரிய கவனத்தினைச் செலுத்தும் அதேவேளை ஒளியூட்டலுக்காக பல்வேறு ஒளியூட்டல் முறைமைகளை நீங்கள் பயன்படுத்த முடியும். சில பொதுவான பிரயோகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
ஒளியூட்டல் முறைமைகள் | பயன்படுத்தப்படக்கூடிய பிரதேசங்கள் |
---|---|
தொங்கும் ஒளியூட்டல் | நீண்ட வளைக்கக்கூடிய பிளாஸ்டிக் குழாயில் சிறு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தூசி தட்டுதல் கடினமானதாக உள்ள இடங்களில் இவற்றினைப் பயன்படுத்தலாம். இதற்கு மிகச் சிறிய அளவு வெளிச்சமே தேவைப்படுகின்றது. கெபினெட்டின் மேற்பகுதி போன்ற இடங்களில் இதனைப் பயன்படுத்தலாம். |
அலுமாரி விளக்குகள் | இவை ஹெலோஜென் விளக்குகளாகும். இவை வட்ட வடிவிலான அல்லது ஓவல் வடிவிலான கெபினெற் விளக்குகள் அல்லது சிறிய டிரக் விளக்குகளாகும். இது திறந்த அல்லது கண்ணாடி முன்பகுதியினைக் கொண்ட கெபினெற்றுக்களில் பயன்படுத்தப்படலாம். |
கீழ் விளக்குகள் | இவை வேலை செய்யும் பிரதேசங்களைப் பிரகாசமாக்குகின்றன. அதாவது சமையல் மேசை போன்ற இடங்கள் |
உலோகங்கள் | இவை மிதமான தோற்றத்தினைக் கொண்டுள்ளதுடன் உலோகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன அல்லது கலப்புலோகங்கள், துருப்பிடித்த இரும்பு, வார்ப்பிரும்பு, நிக்கல், வெண்கலம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை போன்று வர்ணம் பூசப்பட்டுள்ளன. இவை அதிகமாக சமையலைறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. |
பிரகாசத்தினைக் குறைக்கும் சுவிச்சுகள் | இது பிரகாசத்தினைக் குறைத்து இதமான மனோநிலையினை உருவாக்க அனுமதித்து மின்சாரத்தினைச் சேமிக்கின்றது. |
கண்ணாடி மணிகளைக் கொண்ட சேட்கள் | இந்த வகையில் ஒவ்வொரு மணியும் சிறிய அளவில் ஒளியினைப் பிடித்து ஒளிர்கின்றது |
பெண்டன்ட் விளக்குகள் | இது சங்கிலியில் பொருத்தப்பட்டு கூரையில் இருந்து தொங்கவிடப்படுகின்றது |
மீளுற்பத்தி பொருத்துகைகள் | இவை கலைப் பொருட்கள் நிறைந்த இல்லம் போன்ற தோற்றத்தினை வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன அல்லது 19 ஆம் நூற்றாண்டுக் காலத் தளபாட வடிவங்களுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன. |
வட்டச் சுவர் விளக்குகள் | மண்டபங்கள் அல்லது படிக்கட்டுக்களுக்கு ஒளியூட்டப் பயன்படுத்தப்படும் அரை நிலா வடிவினைக் கொண்ட விளக்குகள் |
உட்பதிக்கப்பட்ட விளக்குகள் | கூரையின் உயரம் 2.5 மீற்றருக்குக் குறைவானதாக இருக்கையில் இவை பயன்மிக்கதாகும் என்பதுடன் பொருத்துகைகள் கீழே தொங்காமல் இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் இவை விரும்பப்படுகின்றன |
தரை விளக்குகள் | இவை மேல்நோக்கிய தரை விளக்குகளாகும். இதனால் இவை கண்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாது அதிக வெளிச்சத்தினை வழங்குகின்றன. |
இடம் | நடைமுறை |
---|---|
குளியலறை |
|
படுக்கையறை |
|
உணவறை |
|
தாழ்வாரங்கள் மற்றும் படிக்கட்டுக்கள் |
|
சமையலறை |
|
லிவிங் ரூம் |
|
வேலை அறைகள் |
|