காற்றினை அளக்கும் நிலையங்கள்
காற்று வள நிலையங்கள் என்பவை காற்று வள மதிப்பீடுகள் மற்றும் மின்சக்திச் செயலாற்றுகைக்கென நிர்மானிக்கப்பட்டு, இயக்கப்பட்டு, மீள ஒப்படைக்கப்படும் முறைமைகளாகும். இந்த நிலையங்கள் காற்றின் வேகத்தினையும் காற்றின் திசையினையும் வளியின் செறிவினையும் வளியின் வெப்பநிலையினையும் சூரியக் கதிரியக்கம் நிகழ்ந்த அளவினையும் அளக்கின்ற சாதனங்களின் பரந்த வீச்சினைக் கொண்டுள்ளன.
தேசிய உசாவல் நிலையங்களின் வலையமைப்பினை நாம் இயக்குகின்றோம். இவை பயன்மிக்க காற்று வள மையங்களில் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. நாம் இந்தத் தகவல்களை ஒரு தனித்த தரவுத் தளமாகத் தொகுத்துள்ளோம். இத்தரவுத் தளம் வரலாற்று ரீதியான காற்றுத் தரவுகளையும் தற்போதைய தரவுகளையும் தொகுப்பதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது.
வரைபடத்தினைப் பார்ப்பதற்குச் சொடுக்கவும்
தேவையான உபாயமார்க்கச் செயற்பாடுகளைக் கொள்கை வகுப்போர் முன்னெடுப்பதற்கும் உருவாக்குனர்கள் மின்பிறப்பாக்கக் கருத்திட்டங்களை உருவாக்குவதற்கும் இற்றைப்படுத்தப்பட்ட மற்றும் நம்பத்தகுந்த தகவல்களுடன் பூரணமான காற்று வள மதிப்பீடு தேவைப்படுத்தப்படுகின்றது. இலங்கைக்கான வள மதிப்பீடு WASP மென்பொருளில் உள்ள செய்மதித் தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும். இந்த மாதிரியில் உள்ள பெறுபேறுகள் கள அளவீட்டுத் தரவுகளுக்கு எதிராகப் பரீட்சிக்கப்படும்.
செயற்பாடுகள்
கொள்கை வகுத்தலுக்கும் நீரியல் சக்தி வளங்களுக்கும் நாட்டின் நீரியல் வள வரைபடம் முக்கியமானதாகும். இந்த வரைபடமானது களத்தினைத் தெரிவுசெய்யும் செயன்முறையினை வசதிப்படுத்த ஒரு தரவுத் தளத்தினை வழங்குகின்றது. கிடைக்கக்கூடியதாகவுள்ள வளமானது ஏற்கனவே வரைபடமாக வரையப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஒட்டுமொத்த நீரியல் வள மதிப்பீட்டினை ஒருங்கிணைப்பதற்காக இது விரிவுபடுத்தப்பட்டு எதிர்காலத்தில் வெளியிடப்படும்.
செயற்பாடுகள்
இலங்கை ஒரு தீவாகும். அலையின் சக்தியினைப் பயன்படுத்துவதற்கு இலங்கை ஒரு சிறந்த இடம் எனக் கருதப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அலைச் சக்தி வளங்கள் பற்றிய மதிப்பீடு நடத்தப்படுகின்றது. உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்றுக்கொண்ட களத் தரவுகளைப் பயன்படுத்தி கடல் அலைகளின் பாங்குகள் ஆராயப்படும். மேலும் இலங்கைக்கான அலைப் பண்பு மாதிரி உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட அலைப் பண்பு மாதிரியினைப் பயன்படுத்தி வள ஆற்றல் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.
செயற்பாடுகள்
பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சூரிய சக்தி உறிஞ்சப்படுதலை அதிகரித்தலுடன் தொடர்புடைய தொழில்நுட்ப இடையீடுகள் பற்றிய ஆய்வுகள் நடத்தப்படும். இந்த ஆய்வுப் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன. மேலும் இந்தக் கருத்திட்டத்திற்கான ஆரம்ப நடவடிக்கையாக, டிசி மைக்ரோகிரிட் மூலம் சூரியக் கலங்களின் சக்தி வினைத்திறன் மிக்க பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட மாதிரியினை முன்னோடியாகப் பயன்படுத்துவது பற்றிய பகுப்பாய்வு நடத்தப்படும்.
செயற்பாடுகள்
நமது நாடு உயர்ந்த அளவில் காற்றின் சக்திக்கான சாத்தியத்தினைக் கொண்டுள்ளது என்கின்ற புரிதலுடனும் சூரிய சக்திப் பொருத்துகை ஆற்றலை அதிகரிப்பதற்கு சூரிய சக்தியினைப் பயன்படுத்தும் வெவ்வேறு மாதிரிகள் வழிவகுத்துள்ளன என்கின்ற புரிதலுடனும் காற்றின் சக்தியில் இருந்து மின்சாரத்தினைப் பிறப்பிப்பதற்கான சாத்தியமுள்ள தெரிவுக்குரிய அணுகுமுறைகள் ஆராயப்படுவது கால உசிதமானதாகும். சிறிய அளவிலான காற்று டேர்பைன்கள் தொடர்பில் சில முன்னெடுப்புக்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. ஏனைய சில நீண்ட கால இடையீடுகளிற்கான சாத்தியம் பெருநிலப் பரப்பிற்கு அப்பாலுள்ள பகுதிகளில் காற்றிலிருந்து மின்சாரம் பிறப்பிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளாக அமையும். பல்வகைமைமிக்க காற்று மின்சார உருவாக்க அணுகுமுறைகளைக் கொண்டிருக்கும் நோக்கத்துடன் இது தொடர்பில் சாத்தியமான இடையீடுகள் நடைபெறும்.
செயற்பாடுகள்