வளங்கள் அருகிவருகின்றமையும் சக்திக் கேள்வி தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றமையும் காலநிலை மாற்றத்திலும் எமது கண்டத்தின் சூழியல் அனர்த்தத்திலும் பாரிய தாக்கத்தினைக் கொண்டுள்ளன. வளர்ச்சியடைந்து வரும் சனத்தொகையும் வளர்ச்சியடைந்து வரும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளும் அதிகரித்துவரும் சக்திக் கேள்வியினை உருவாக்கிவருகின்றன.
இதனை மனதிற்கொண்டு, தொழிற்துறைகளும் துறைகளும் நிலைபெறுதகு சக்தி எதிர்காலத்திற்கு இடைமாற்றம் அடைவதற்கு நாம் உதவி வருவதுடன் ஒத்துழைப்பிற்கான தளமாகவும் செயல்நேர்த்திக்கான மையமாகவும் கொள்கை, தொழில்நுட்பம், வளங்கள் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி பற்றிய அறிவு ஆகியவற்றின் வைப்பகமாகவும் நாம் திகழ்கின்றோம்.
நிலைபெறுதகு அபிவிருத்தி, சக்தி அணுகல், சக்திப் பாதுகாப்பு மற்றும் குறைந்த கரிமப் பொருளாதார வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சி ஆகியவற்றிற்கான தேடலில் நீர்மின்சக்தி, காற்று மற்றும் உயிரியப் பொருண்மை உள்ளிட்ட சகல வகையான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியின் பரந்த அங்கீகாரத்தினையும் நிலைபெறுதகு பயன்பாட்டினையும் நாம் மேம்படுத்துகின்றோம்.
புவியியல் – காலநிலைச் சூழமைவுடன் பொருத்திப் பார்க்கையில் இலங்கை பலவகையான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களைப் பாக்கியமாகப் பெற்றுள்ளது. இவற்றுள் சில நாட்டின் சக்தித் தேவையினை விநியோகிப்பதற்காகப் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டு விருத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஏனையவற்றினைப் பொருத்த அளவில் தொழில்நுட்பம் முதிர்ச்சியுடையதாக மாறி, பயன்படுத்துவது பொருளாதார ரீதியாகச் சாத்தியமானதாக மாறுகையில் அவை விருத்தி செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
நாம் எமது தேவைகளுக்காகப் பல்வேறு வகையான சக்தி வளங்களைப் பயன்படுத்துகின்றோம். சக்தி வளங்கள் மீள்புதுப்பிக்கத்தக்கவை மற்றும் மீள்புதுப்பிக்க முடியாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியினையும் மீள்புதுப்பிக்க முடியாத சக்தியினையும் அடிப்படைச் சக்தி வளங்களாகப் பயன்படுத்தலாம் என்பதுடன் அவற்றினை மின்சாரம் மற்றும் ஐதரசன் போன்ற இரண்டாம் நிலைச் சக்தி வளங்களாகவும் மாற்ற முடியும்.
மீள்புதுப்பிக்க முடியாத சக்தி வளங்கள்
இலங்கையில் நாம் பயன்படுத்துகின்ற சக்தியில் பெரும்பான்மையான சக்தியினை மீள்புதுப்பிக்க முடியாத சக்தி வளங்களே வழங்குகின்றன. மீள்புதுப்பிக்க முடியாத சக்தி வளங்களுள் நிலக்கரி, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெயில் இருந்து பெறப்படும் பெற்றோல் மற்றும் இயற்கை எரிவாயுத் திரவங்கள் ஆகியவை உள்ளடங்குகின்றன. இந்தச் சக்தி வளங்களின் விநியோகம் வரையறுக்கப்பட்டதாக இருப்பதாலும் உருவாகுவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கின்றமையாலும் மீள்புதுப்பிக்க முடியாத சக்தி வளங்கள் என அழைக்கப்படுகின்றன. நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிலத்தின் கீழ் புதையுண்டுபோன தாவரங்களின் எச்சங்களில் இருந்து உருவானவையாகும்.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள்
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களுள் உயிரியப் பொருண்மை, பூகோள வெப்ப சக்தி, நீர்மின்சாரம், சூரிய சக்தி மற்றும் காற்றின் சக்தி ஆகியவை அடங்குகின்றன. இவை குறுகிய காலத்தில் இயற்கையாக மீள்நிரப்பப்படுகின்றமையினால் மீள்புதுப்பிக்கத்தக்கவை என அழைக்கப்படுகின்றன.
இயற்கை வளம் ஒன்றினைப் பயன்மிக்க சக்தி வடிவமாக மாற்ற முடியுமாக இருந்தால் அது சக்தி வளம் எனக் கருதப்படுகின்றது. உலகில் எண்ணற்ற சக்தி மூலங்களின் வடிவங்கள் உள்ளன. வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு வளங்களைப் பயன்படுத்துகின்றன. இவை சக்தி வளங்கள் கிடைக்கக்கூடியதாக இருத்தல் மற்றும் பொருளாதாரக் கோட்பாடுகள் ஆகியவற்றிற்கு அமையவே அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றன. எவ்வாறாயினும் ஒரு நாடு அதன் சக்தி வடிவத்தினைத் தெரிவுசெய்வதில் சுற்றுச்சூழலும் அரசியல் காரணங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
ஒரு குறிப்பிட்ட வளத்தினைச் சக்தி விநியோக மூலமாகப் பயன்படுத்துவதற்கு அச்சக்தி உள்நாட்டிலோ அல்லது உலகளாவிய ரீதியிலோ கிடைக்கக்கூடியதாக இருத்தல் மாத்திரமே கருத்திற்கொள்ளப்படவேண்டிய காரணியாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. மிக முக்கியமாக, கிடைக்கக்கூடிய ஏனைய மூலங்களுடன் ஒப்பிடுகையில் பயன்பாடானது சிக்கனமானதாக இருக்கவேண்டும். எனவே, வளத்தினை மிகவும் பயன்மிக்க வடிவமாக மாற்றுவதற்கு இருக்கின்ற தொழில்நுட்பம் சக்தி விநியோகத்திற்கான சக்தி வளத்தினைத் தெரிவுசெய்வதில் முக்கியமானதாகும். காலப்போக்கில் நிகழும் தொழில்நுட்ப மாற்றமும் வளம் கிடைக்கக்கூடியதாக இருத்தலும் சக்தி விநியோகத்திற்காக வளத்தினைப் பயன்படுத்துவதன் சிக்கனத்தன்மையினை மாற்றலாம். எனவே ஒரு நாடு அதன் சக்தித் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் வளங்கள் காலத்துடன் மாற்றமடைகின்றன.
சக்தித் தேவைகளுக்காக நாம் இறக்குமதி செய்து பயன்படுத்துவதற்குச் சர்வதேச சந்தையில் சக்தி வளங்களின் பல வடிவங்கள் கிடைக்கின்றன. எவ்வாறாயினும் இந்த நோக்கத்திற்காக இலங்கை இதுவரையில் பெருமளவிற்குப் பெற்றோலிய எரிபொருட்களை மாத்திரமே பயன்படுத்திவருகின்றது. அதிகரித்துவரும் பெற்றோலிய விலைகள் மின்சக்திப் பிறப்பாக்கத்திற்காக நிலக்கரியினை இலங்கை அறிமுகப்படுத்தும் நிலையினை உருவாக்கியுள்ளது. சில குறிப்பிட்ட பயன்பாடுகளில் திரவப் பெற்றோலுக்கு பதிலாக நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போன்ற ஏனைய வளங்களைப் பயன்படுத்துவதை இலங்கை பரீட்சிக்கும் நிலையினையும் இது ஏற்படுத்தியுள்ளது. பின்வருபவை வர்த்தக ரீதியாகச் சக்தி விநியோகத்திற்காக உலகளாவிய ரீதியில் கிடைக்கின்ற மிகப் பொதுவான வளங்களாகும்:
மிக அண்மைக் காலத்தில் உயிரியல் எரிபொருட்கள் போன்ற புதிய சக்தி விநியோகத் தொழில்நுட்பங்களும் ஐதரசன் போன்ற சக்திக் காவிகளும் மேற்குறிப்பிட்ட மரபுரீதியான தொழில்நுட்பங்களுக்கான மாற்றீடுகளாகவும் மாற்றத் தெரிவுகளாகவும் உருவாகியுள்ளன. எவ்வாறாயினும் சக்தி விநியோக நோக்கங்களுக்காக இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் இன்னும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கி்ன்றது.
பின்வரும் அட்டவணை இலங்கையிலுள்ள உலகளாவிய வளங்களின் வெவ்வேறு பிரயோகங்களின் சுருக்கமான விபரத்தினை வழங்குகின்றது.
முழு விபரங்களை பார்வையிட திரையை நகர்த்தவும்
இறக்குமதி செய்யப்பட்ட சக்தி மூலம் | பொதுவான பாவனையாளர் குழுக்கள் | பொதுவான பிரயோகங்கள் | தற்போதைய பாவனையின் அளவு |
---|---|---|---|
திரவப் பெற்றோலிய எரிவாயு உள்ளடங்கலாக கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் | வீடுகள் | ஒளி, சமையல் | பரவலாக |
வர்த்தகம் | ஹோட்டல்கள், பேக்கரிகள் | பரவலாக | |
தொழிற்துறை | உலைக்களம், சூளை, கொதிகலங்கள் | பரவலாக | |
போக்குவரத்து | ரயில், வீதி, வான், கடல் | பரவலாக | |
நிலக்கரி | ரயில்வே | ரயில்வே | புறக்கணிக்கத்தக்கது |
தொழிற்துறை | சூளைகள் | சீமெந்துத் தயாரிப்பு மற்றும் வார்ப்பகங்கள் | |
கொதிகலங்கள் | 2 அல்லது அதற்கு மேல் | ||
மின்சக்திப் பிறப்பாக்கம் | கொதிகலம் | 3 units of 300 MW (900 MW) |
எமது நாட்டினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மற்றும் சுவட்டு எரிபொருள் ஒதுக்கங்கள் ஆகியவை சுதேச வளங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
எமது நாடு மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் பல்வேறு வடிவங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்த வளங்கள் பூகோளக் காலநிலை நிலைமைகளினால் பாதுகாக்கப்பட்டுள்ளன. இலங்கை இந்து சமுத்திரத்தினால் சூழப்பட்டு அயனமண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தீவாக இருக்கின்ற காரணத்தினால் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை மற்றும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை எனும் இரண்டு பருவமழைகளைப் பெறுகின்றது. மத்திய மலைநாடு, தாழ்நில மலைத் தொடர்கள், சமதரைகள் மற்றும் முகில் உருவாக்கத்தினைப் பாதிக்கின்ற சமவெளிகள் ஆகியவை எமது நாட்டில் காணப்படுகின்றன. நாட்டின் வருடாந்தச் சராசரி மழைவீழ்ச்சி 750 மில்லி மீற்றருக்கும் 6000 மில்லிமீற்றருக்கும் இடையில் அமைந்துள்ளது. இவையே வற்றாத ஆற்று முறைமைக்கான மூலங்களாக அமைந்துள்ளன. அயனமண்டலத்தின் உயிரியல் காலநிலை நிலைமைகளுடன் சேர்ந்துள்ள உயர் மழைவீழ்ச்சியானது நாட்டில் உயர் தாவர அடர்த்தியினை வழங்கியுள்ளது. எனவே உயிரியப் பொருண்மை அபரிமிதமாகக் கிடைக்கின்றது. இலங்கை பூமத்திய ரேகையின் வலயத்தினுள் அமைந்துள்ள காரணத்தினால் வருடம் முழுவதும் சூரியக் கதிர்வீச்சினைப் பெற்றுக்கொள்கின்றது. நாட்டின் அயன வெப்பநிலையும் இந்து சமுத்திரத்தில் நாடு அமைந்துள்ள நிலையும் தனித்துவமான காற்றுப் பிரிவுகள் நாட்டிற்குக் கிடைப்பதற்கு வழிகோலியுள்ளன. இவை எமது நாடு தாராளமான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் தளத்தினைக் கொண்டிருப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
இவற்றுள் சில நாட்டின் சக்தித் தேவையினை விநியோகிப்பதற்காகப் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டு விருத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஏனையவற்றினைப் பொருத்த அளவில் தொழில்நுட்பம் முதிர்ச்சியாகி, பயன்படுத்துவது பொருளாதார ரீதியாகச் சாத்தியமானதாக மாறுகையில் அவை விருத்தி செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. பின்வருபவை இலங்கையில் கிடைக்கின்ற பிரதான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களாகும்.
மேற்குறிப்பிட்ட சுதேச மீள்புதுப்பிக்கத்தக்க வளங்களுக்கு மேலதிகமாக இலங்கைப் பிராந்தியத்தினுள் சுவட்டு எரிபொருள் படிவுகள் இருக்கின்றதா என ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த ஆய்வுகள் நாட்டின் வடமேல் கடற்படுகைக்கு அப்பால் மூன்று ஆழமான இயற்கை எரிவாயுப் படிவுகள் இருப்பதைக் காட்டியுள்ளன.
நீர்மின்சாரத்தினைப் பெறும் தொழில்நுட்பம் இலங்கையில் மின்சக்திப் பிறப்பாக்கத்திற்காக நூறாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மரபுரீதியான மின்பிறப்பாக்கத் திட்டம் எனவும் அறியப்படுகின்ற பாரிய நீர்மின் பிறப்பாக்கக் கருத்திட்டங்கள் பொதுவாக நீரினைக் களஞ்சியப்படுத்துவதற்காக அணையினையும் நீர்த்தேக்கத்தினையும் பயன்படுத்துகின்றன. எவ்வாறாயினும் இவ்வாறான கருத்திட்டங்களுக்கான சாத்தியம் இப்போது முடிவடைந்துவிட்டது. எனவே மின்சாரப் பிறப்பாக்கத்திற்காக நாம் ஏனைய பிறப்பாக்க வழிகளை நாடவேண்டும். இந்த வழிகளுள் சிறிய நீர்மின் பிறப்பாக்க ஆலைகள், காற்றின் சக்தியினால் மின்சாரத்தினை உற்பத்திசெய்தல் மற்றும் சூரிய சக்திக் கருத்திட்டங்கள் ஆகியவையும் இவற்றினைத் தேசிய மின்சார வலையமைப்பினுள் இணைப்பதும் கூடுதல் கவனத்தினைப் பெற்று வருகின்றன. இவ்வாறான தொழில்நுட்பங்கள் புதிய மீள் புதுப்பிக்கத்தக்க சக்தித் தொழில்நுட்பங்கள் எனக் கூறப்படுகின்றன(NRE). இவை கடந்த காலத்தில் மரபு ரீதியான தேசிய மின்பிறப்பாக்க வலையமைப்பில் பயன்படுத்தப்படவில்லை. மின்பிறப்பாக்கத்தில் பயன்படுத்தப்படாவிட்டாலும் நினைவுதெரிந்த நாட்களில் இருந்து உயிரியப் பொருண்மையும் சூரிய சக்தியும் காற்றின் சக்தியும் மனிதச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டே வருகின்றன. உயிரியப் பொருண்மையும் சூரிய சக்தியும் சமையலுக்காகவும் விவசாயப் பதப்படுத்தல் செயன்முறைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்போது காற்றானது குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றது.
எவ்வாறாயினும் கைத்தொழில் நோக்கங்களுக்காகக் காற்றின் சக்தியினைப் பயன்படுத்திய முதலாவது நாடாக இலங்கை விளங்குகின்றது. அதாவது: கிறிஸ்துவுக்கு முன் 3 ஆம் நூற்றாண்டில் இரும்பினை உருக்கும் உலைக்களம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கீழே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு நாம் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் வெவ்வேறு பயன்களைக் கொண்டுள்ளோம்.
சுதேச சக்தி மூலம் | பொதுவான பாவனையாளர் குழுக்கள் | பொதுவான பிரயோகங்கள் | 2017 முடிவில் பாவனையின் அளவு |
---|---|---|---|
உயிரியப் பொருண்மை | வீடுகள் | சமையல் | பரவலாக |
வர்த்தகம் | ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்கள் | பரவலாக | |
தொழிற்துறை | தேயிலை உலர்த்தல், செங்கல் மற்றும் ஓடு | பரவலாக | |
நீராவிப் பிறப்பாக்கம் | வளர்கிறது | ||
தனியார் மின்சக்தி ஆலை | பயன்பாட்டிற்கான விற்பனை | 10 மின்சக்தி ஆலைகள் | |
சொந்த நுகர்வு | பல கிராமங்கள் மற்றும் தொழிற்சாலைகள் | ||
நீர் மின்சாரம் | மின் பாவனைக்குச் சொந்தமான பாரிய பல்நோக்கு முறைமைகள் | வாடிக்கையாளர்களுக்குச் சில்லறை விற்பனையாக | பாரிய மின்சகக்தி ஆலைகள் |
வர்த்தக வலையமைப்புடன் இணைக்கப்பட்ட | பயன்பாட்டிற்கான விற்பனை | 182 மின்சக்தி ஆலைகள் | |
கிராம மட்ட வலையமைப்பில் இல்லாத மின்சாரம் | வீட்டுப் பாவனை | வலையமைப்புடன் இணைக்கப்பட்டு செயற்பட்ட சில ஆலைகள் இப்போது பயன்பாட்டில் இல்லை | |
வலையமைப்பில் சேராத தொழிற்துறை மின்சாரம் | தேயிலைத் தொழிற்துறை | சொற்பமான மின்சக்தி ஆலைகள் | |
கைத்தொழில் இயந்திரச் செலுத்திகள் | தேயிலைக் கைத்தொழில் | புறக்கணிக்கத்தக்கது, ஒன்று அல்லது இரண்டு எஞ்சியுள்ளது | |
சூரிய சக்தி | சூரிய சக்திக் கலங்கள் | கூரைமேல் பொருத்தப்படுபவை | 10,389 பொருத்துகைகள் |
சூரிய சக்திக் கலங்கள் | வீடுகளுக்கு ஒளியூட்டல் | பெரும்எண்ணிக்கையில் இனிமேலும் அறிக்கையிடப்படுவதில்லை | |
வலையமைப்புடடன் இணைக்கப்பட்ட PV | பயன்பாட்டிற்கான விற்பனை | 08 மின்சக்தி ஆலைகள் | |
சூரிய வெப்பசக்தி | வர்த்தகம் மற்றும் உள்நாட்டுத் துறைகளில் சுடுநீர் முறைமைகள் | பரவலாக | |
முறைசாராப் பாவனை | வீட்டுப் பாவனை மற்றும் விவசாயப் பாவனை | பரவலாக | |
காற்றின் சக்தி | வலையமைப்புடன் இணைக்கப்பட்ட காற்று | வாடிக்கையாளர்களுக்கு சில்லறையாக | 15 மின்சக்தி ஆலைகள் |
வலையமைப்புடன் இணைக்கப்படாத மின் ஆலைகள் | வதிவிடப் பாவனைக்காக | சில டசின்கள், அதிகமானவை பாவனையில் இல்லை | |
நீரிறைத்தல் | விவசாயம் | சில டசின்கள், ஒன்று அல்லது இரண்டு பயன்பாட்டில் |