தேசிய சித்திரக்கலைப் போட்டிகள்




கண்காட்சியும் மற்றும் நாடளாவிய சித்திரக்கலைப் போட்டி விருது வழங்கும் வைபவமும் மற்றும் ஆக்கபூர்வ மின்சார சக்தி சேமிப்பு உதவு குறிப்புகள் போட்டியும் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி BMICH பிரதான மண்டபத்தில் நடத்தப்பட்டன. குறித்த போட்டி சக்திக் கேள்வி சார் முகாமைத்துவம் பற்றிய ஜனாதிபதி சிறப்புச்செயலணியின் உதவியுடன் இலங்கை மின்சார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் போட்டி இளம் சந்ததியினருக்கு மத்தியில் சக்தி வினைத்திறன் எண்ணக்கருக்களை / பரிகார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.

குறித்த சித்திரக்கலைப் போட்டி 6 முதல் 13 ஆம் தரம் வரையான பாடசாலை மாணவர்களுக்கு மூன்று வயது வகுதிகளின் கீழ் திறந்த போட்டியாக நடத்தப்பட்டது. குறித்த போட்டி முதலில் மாவட்ட மட்டத்திலும் இறுதியாக தேசிய மட்டத்திலும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு வயதுத் தொகுதியிலிருந்தும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறித்த சித்திரக்கலைப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று மாணவர்கள் தேசிய மட்ட சித்திரக்கலைப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். மாவட்ட மட்டத்தில் குறித்த போட்டியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு முறையே ரூ. 45,000, ரூ. 35,000 மற்றும் ரூ. 25,000 பணப் பரிசில்களும், குறித்த போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு முறையே ரூ. 100,000, ரூ. 75,000 மற்றும் ரூ. 50,000 பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன. மாவட்ட அடிப்படையில் வெற்றி பெற்ற ஐந்து வெற்றியாளர்களுக்கு ரூ.10,000 வீதம் பணப் பரிசில்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற சகலருக்கும் கட்டம் கட்டமாக விருதுகளும், பணப் பரிசில் விருதுகளும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற 50% மாணவர்களுக்கும் ஏனைய 50% பாடசாலைகளுக்கும் இத்தகைய விருதுகளும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

குறித்த போட்டி தொடர்பான சகல விபரங்களையும் உள்ளிட்டு அரசாங்கப் பாடசாலைகளுக்கும், தனியார் பாடசாலைகளுக்கும் சர்வதேச பாடசாலைகளுக்கும் மற்றும் அதிபர்களுக்கும் கடிதங்களினூடாக அறிவிக்கப்பட்டது. இது தவிர, மாகாண உதவி விஞ்ஞான கலைகள் பாடத்திற்கான பணிப்பாளர்களுக்கு குறித்த நிகழ்ச்சித்திட்டம் பற்றி போதிக்கப்பட்டதுடன் பாடசாலை சக்திக் குழுக்களுக்கும் போட்டி பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, பொதுமக்களுக்கு அச்சீட்டு ஊடகத்தினூடாக குறித்த போட்டி பற்றி அறிவிக்கப்பட்டது.