நகரத்தில் பேசுதல்




கேள்வி: சக்தி முகாமைத்துவத்தில் சக்தி வினைத்திறன் முதல் நிலை எரிபொருளாக கருதப்படுவது ஏன்?

பதில்: சக்தி வினைத்திறனை சற்று நீர்வலு, சூரிய சக்தி, உயிரணுத்திணிவுச் சக்தி போன்ற ஒரு சக்தி மூலமாக கருதலாம். சக்தியைப் பாதுகாப்பதில் அதற்கிருக்கின்ற முக்கியத்துவத்தை கருத்திற்கொள்கின்ற போது, அது பாரிய பொருளாதாரங்களில் ‘முதன் நிலை எரிபொருள்’ என அழைக்கப்படுகின்றது. உலகலாவிய அளவில் நோக்கும் போது, 2014 ஆம் ஆண்டில் மொத்த சக்தி நுகர்வில் சக்தி வினைத்திறனின் பங்கு 38% வீதமாக இருந்தது என உலக சக்தி மன்றத்தின் சுட்டிகள் தரவுத்தளம் சுட்டிக்காட்டுகின்றது. இது உண்மையில் நிலையான ஒரு முன்னேற்றமாகும். இது தவிர்க்கப்பட்ட சக்தி நுகர்வு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கேள்வி: சூரிய சக்தி, காற்று சக்தி, நீர்வலு சக்தி மற்றும் உயிரணுத்திணிவுச் சக்தி முதிலிய சக்தி மூலவளங்கள் இலங்கையில் அதிகளவு காணப்படுகின்றன. இத்தகைய வளங்கள் அதிகளவில் காணப்படுகின்ற போதிலும், முழு நாட்டிற்கும் சக்தியை வழங்குவதற்காக அத்தகைய வளங்கள் ஏன் அபிவிருத்தி செய்யப்படுவதில்லை?

A:

கேள்வி: மின்சாரப் பளுக் குறிப்பு என்றால் என்ன?

பதில்: மின்சாரப் பளுக் குறிப்பு என்பது ஒரு நாளின் 24 மணித்தியாலங்களுக்கும் மின்சாரத்திற்கான தேவை பூர்த்தி செய்யப்படுகின்ற விதத்தை சுட்டிக்காட்டுகின்ற ஒரு வரைபடமாகும். இந்த வரைபடம் கீழே தரப்பட்டுள்ளது.

வரைபடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு, ஒரு நாளில் நாம் அதிகளவு மின்சாரத்தை நுகர்கின்ற மற்றும் மிகவும் சொற்பளவான மின்சாரத்தை நுகின்ற அல்லது கொஞ்சமும் மின்சாரத்தை நுகராத ஒரு சில மணித்தியாலங்கள் இருக்கின்றன. இந்த மாதிரியானது சகல நாட்களுக்கும் பொதுவானதாகும். நாளில் 1830 - 2130 வரையான காலப்பகுதி அதிகளவு மின்சாரம் தேவைப்படுகின்ற நேரம் என்பதை நீங்கள் அவதானிக்கலாம். இத்தகைய காலப்பகுதி மாலை நேர உச்சளவு மின்சாரம் தேவையான காலப்பகுதி என அழைக்கப்படும். மின்சாரம் அதிகம் தேவைப்படும் இந்த மலை நேரங்களில் மின்சாரத்தின் பாவனையைக் குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தக் காலப்பகுதியில் மின்சாரத்தை விநியோகிப்பதற்கு செலவு மிகுந்த எரி எண்ணெய்களில் இயங்கும் மின்னுற்பத்திப் பொறித்தொகுதிகளை எமக்கு இயக்க நேரிடும். அதனால் அதிக செலவு ஏற்படும். உதாரணமாக: இத்தகைய நேரங்களில் ஆடைகளையழுத்தல், ஆடைகளை சலவைசெய்வதற்காக சலவை இயந்திரங்களை இயக்குதல் முதலிய செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வீணாக எரியும் மின்குமிழ்களையும் ஏனைய மின்சார உபகரணங்களையும் அணைத்துவிடுதல் வேண்டும்.

0200 - 0400 நேரங்களில் தேவைப்படும் மின்சாரமே பொதுவாக மின்சாரத்திற்கான ஆகக்குறைந்த கேள்வியாகும். இத்தகைய நேரத்தில் வழங்கப்படும் மின்சாரம் மின்சார அடிப்படைப் பளு என அழைக்கப்படும்.