கீழே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நிறுவனங்களில் தாபிக்கப்பட்டிருக்கின்ற ஒளியியல் ஆய்வகங்களில் மின்குமிழ்களின் மின்சார ஒளியியல் பண்புகள் பரிசீலிக்கப்படுகின்றன.
4’ மற்றும் 2’ குழாய் ஃப்ளோரஷன்ட் மின்குமிழ்களையும், CFLS LED மின்குமிழ்களையும், ஹலகென் சோடியம் மின்குமிழ்களையும் இந்த ஆய்வுகூடங்களில் பரிசோதித்துக்கொள்ளலாம்.
கூரை மின்விசிறிகளின் சக்தி செயல்திறன் பரிசோதனைக்கான ஒரு பரிசோதனை வசதி தற்பொழுது இலங்கை நியமங்கள் கட்டளை நிறுவகத்தில் (SLSI) நிறுவப்பட்டு வருகின்றது. கூரை மின்வசிறிகளின் மின்சக்தி நுகர்வு, சக்திக் காரணி போன்ற காற்றோட்ட வேகம், மின்சார ஒளியியல் பண்புகள் என்பவற்றை இந்த ஆய்வுகூடத்தில் பரிசோதித்துக்கொள்ளலாம்.
ஒரு குளிர்சாதனப் பெட்டிப் பரிசோதனை ஆய்வுகூட வசதி NERD நிலையத்தில் தாபிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பெட்டிகளுக்கு சக்தி முத்திரையிடும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்கும் பொருட்டு இந்தப் பரிசோதனை வசதி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் (ஆ.அ.வ.) இ.நி.வ.அ.ச. சபைக்கு வழங்கப்பட்டது. இந்த வசதியில், ஒரே நேரத்தில் மூன்று குளிர்சாதனப் பெட்டிகளை பரிசோதித்துக்கொள்ளலாம்.