ஒன்பது முக்கியமான பிரிவுகள்




இலங்கையில் உச்சநேர மின்சாரத்திற்கான கேள்வி மாலை நேரத்தில் அவசியமான வதிவிடங்களுக்குரிய மின்னொளியேற்றலினால் வகைப்படுத்தப்படுகின்றது. இன்கன்டஷன்ட் பிfலமென்ட் மின்குமிழ் (IFL) பிரதான மின்னொளியேற்றல் மூலங்களில் ஒரு மூலமாகும். இந்த மின்குமிழ்கள் குறைந்த மின்சாரக் கட்டணக் கட்டிடங்களில் (<90 கி.வொ.ம./மாதம்) அதாவது 76% வீதமான வதிவிடங்களில் நுகர்வோரினால் பாவிக்கப்படுகின்றன. இந்த மின்சார வாடிக்கையாளர்களுக்கு மானிய அளவில் அதிகமான மின்சாரமும் கிடைக்கின்றது. சாதாரண மின்குமிழ்களுடன் ஒப்பிடும் போது, LED மின்குமிழ்கள் மிகவும் சக்தி வினைத்திறன் வாய்ந்தனவாகும். ஆனால், இந்த மின்குமிழ்கள் விலையில் உயர்ந்தவை. ஆகையால், IFL மின்குமிழ்களுக்கு பதிலாக LED மின்குமிழ்களை வாங்கி மின்சார வாடிக்கையாளர்களால் பாவிக்கச்செய்வது கடினமான விடயமாகும். ஆதலால், ‘சக்தி’ என்ற பெயரில் LED மின்குமிழ்களைப் பகிர்ந்தளிக்கும் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மின்சாரப் பாவனைத் தரப்புகளினால் LED மின்குமிழ்களை தொகையாக வாங்கச் செய்வதற்கும் விநியோகத் தரப்புகளினால் சந்தை விலையில் 1/3 பங்குக்குக் குறைந்த விலையில் விநியோகிக்கச் செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. மீளச்செலுத்தக்கூடிய கடன் தவணைக்கட்டண காலம் நான்கு மாதங்களாகும். ஒரு 2 ஆண்டுக் கடன் திட்டத்தின் அடிப்படையில், குறைந்த விலையில் LED மின்குமிழ்களை விநியோகிக்கும் ஒரு திட்டம் க்றிட் மின்சார IFL மின்குமிழ்களின் பாவனையைக் குறைப்பதற்கான ஒரு மின்சார ஒளியேற்றல் சந்தைப் பரிவர்த்தனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 10 மில்லியன் LED மின்குமிழ்கள் (9 W) 3.9 மில்லியன் வீடுகளில் பாவிப்பதற்காக குடும்பங்களுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இத்தகைய மின்குமிழ்களினது பாவனையின் காரணமாக, உச்சநேர மின்சாரத்திற்கான கேள்வியை வருடாந்தம் 432 ஜி.வொ.ம. மற்றும் 297,907 tCO2 என்ற அளவான மின்சாரத்தை சேமித்து 304 மெ.வொ. அளவால் குறைக்க முடியும்.

முன்னேற்றம்:

குறித்த கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. கொள்வனவு சார்ந்த செயற்பாடுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. EDSM பற்றிய PTF செயலணி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஒரு துண்டுப்பிரசார நடவடிக்கையைத் திட்டமிடப்பட்டுள்ளது. அன்ட்ரொய்ட் பிரயோகமும் லெகோ நிறுவனத்தின் கூட்டொத்துழைப்பில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

குளிரூட்டல் மற்றும் குளிரூட்டும் நடபடிமுறை முதலியவற்றுக்கு ஹோட்டல்களிலும், புடவைத் தொழிற்சாலைகளிலும், வைத்தியசாலைகளிலும் பாரியளவான கட்டிடங்களிலும் குளிவிப்பான் அலகுகள் அண்ணளவாக 30% மின்சாரத்தை நுகர்கின்றன. பழைய, சக்தி வினைத்திறனற்ற குளிர்விப்பான்களுக்கு பதிலாக நவீன சக்தி வினைத்திறன் வாய்ந்த குளிர்விப்பான்களைப் பாவிப்பது அவசியம். இந்த ரெட்ரோஃபிட் இலங்கையிலுள்ள கேள்வி சார் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தில் ஒரு பிரதான அங்கமாக இனங்காணப்பட்டுள்ளது. இதனூடாக, 2020 ஆம் ஆண்டளவில் வருடாந்தம் 41 ஜி.வொ.ம. அளவான மின்சாரத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்டுள்ள ஆகுசெலவு 11,241 மில்லியன் ரூபாவாகும். இத்தகைய பிரதியீட்டு நடவடிக்கை, அரசாங்கத்தின் பிரதிநிதிகள், பட்டயப் பொறியியலாளர்கள், சக்திச் சேவைக் கம்பனிகள் (ESCos) முதலிய தரப்புகள் அடங்கலாக கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடங்களில் மேற்கொள்ளப்படும்.

முன்னேற்றம்:

குளிர்விப்பான் சேவைகள் பிரிவிலுள்ள சக்திச் சேவைக் கம்பனிகளுடன் (ESCos), ஒரு கூட்டம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி நடத்தப்பட்டது. இயக்கத்திலுள்ள குளிர்விப்பான் அலகுகளின் ஒரு பொருட்பதிவேட்டுப் பட்டியலைத் தயாரிக்கும் பொருட்டு ஏற்கெனவேயிருக்கின்ற குளிர்விப்பான் முறைமைகள் தொடர்பான தரவுகளை சேகரிப்பதற்கு, இந்தக் கூட்டத்தில் பல வழிமுறைகள் முன்மொழியப்பட்டன. இதே நேரம் சக்தி வினைத்திறன் வாய்ந்த குளிர்விப்பான் பொறித்தொகுதிகள் பற்றிய சம்பவ ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அதன் பின்னர், நடைமுறைப்படுத்துவதன் நிமித்தம் சக்தி வினைத்திறனற்ற குளிர்விப்பான்களை அவற்றின் பாவனையிலிருந்து கட்டம் கட்டமாக அகற்றுவதற்கும் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் என ஒரு கருத்திட்டப் பிரேரணை தயாரிக்கப்படும். கருத்திட்டத்திற்கு முந்தியகால அடிப்படை ஆய்வுகளுக்கு எதிராக கருத்திட்டத்திற்கு பிற்பட்டகால இயக்கச்செயற்பாட்டு நிலைகள் சான்றுபெற்ற சக்தி மதிப்பீட்டாய்வாளர்களினால் கண்காணிக்கப்படும்.

குளிர்சாதனப் பெட்டிகள் ஒரு வீட்டில் சராசரியாக அதிகளவில் சக்தியை நுகரும் உபகரணங்களுக்கு இடையிலான பெரும் உபகரணங்களாகும். குளிர்சாதனப் பெட்டிகள் மின்சாரக் கட்டணத்தின் 50% வீதத்திற்கு காரணமாக அமைகின்றன. ஆகையால், பாவனைக்கொவ்வாதிருக்கின்ற குளிர்சாதனப் பெட்டிகளை அகற்றுவதற்குரிய ஒரு வர்த்தக அளவான திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஒரு சந்தைத் தலையீட்டு நடவடிக்கையினூடாக இலங்கையின் சந்தையிலிருந்து சக்தி வினைத்திறனற்ற குளிர்சாதனப் பெட்டிகளை அவற்றின் பாவனையிலிருந்து கட்டம் கட்டமாக அகற்றுவதற்கு உத்தேசிக்கப்படுகின்றது. வங்கிகள், மின்சார வசதியைப் பயன்படுத்தும் தரப்புகள், வர்த்தகர்கள் மற்றும் மின்சார வாடிக்கையாளர்கள் ஆகிய சகல தரப்புகளும் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலையமைப்பு ரீதியில் ஒன்றிணையும். வர்த்தகத் தரப்புகள் மின்சார வாடிக்கையாளர்களை குறித்த நிகழ்ச்சித்திட்டத்தில் ஈடுபடச்செய்யும். வர்த்தகத் தரப்புகள் குறித்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான நிதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வங்கிகளை அணுகும். கடன் வசதியை குறைந்த வட்டியில் பெற்றுக்கொள்ளலாம். வர்த்தகத் தரப்புகள் வாடிக்கையாளர்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகளை விநியோகித்த பின்னர், குளிர்சாதனப் பெட்டிகளின் செலவுக் கட்டணங்கள் மின்சார வசதிக் கட்டணத்தினூடாக தவணைக்கட்டணங்களின் அடிப்படையில் செலுத்தப்படும். கடன் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும். குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் மொத்த ஆகுசெலவு 3.5 பில்லியன் ரூபாவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக, 2020 ஆம் ஆண்டளவில் 161 ஜி.வொ.ம. மின்சாரத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னேற்றம்:

குளிர்சாதனப் பெட்டிகளின் தெரிவுக்கான தகவுதிறனைத் தயாரிப்பதற்கான குளிர்சாதனப் பெட்டிகளைப் பரிசோதிக்கும் நடவடிக்கை தற்பொழுது NERD நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அக்கறையுடைய தரப்புகள் கூட்டமும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடத்தப்பட்டது. அக்கறையுடைய தரப்புகளுக்கு பெற்றுக் கொடுக்கும் பொருட்டு தற்பொழுது சந்தைத் திறமுறைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

உருப்படம் 01: அக்கறையுடைய தரப்புகளுக்கான வேலையரங்கு

சீமெந்து மற்றும் மட்பாண்டக் கைத்தொழில்கள் போன்ற மிகக்குறைந்த ஒருசில கைத்தொழில்கள் தவிர, கைத்தொழில்களில் உந்து சக்திற்கான மின்சார நுகர்வு வீதம் அதிகளவில் காணப்படுகின்றது. மோட்டார்கள் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றில் அதிகமான மோட்டார்கள் சக்தி வினைத்திறன் குன்றியனவாகும். இன்னும், இத்தகைய மோட்டார்கள் குறைந்த செலவில் கிடைக்கக்கூடியதாக இருப்பதால், அதிக சக்தி வினை்ததிறன் வாய்ந்த மோட்டார்களுடன் ஒப்பிடும் போது, கைத்தொழில்கள் அவற்றுக்காக அடிப்படை முதலீடாக முதலிடும் அளவு குறைவாகும். இருப்பினும், பாவனை வாழ்க்கை வட்ட ஆகுசெலவுடன் ஒப்பிடும் போது, இவை கைத்தொழில்களுக்கு கணிசமானளவு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன. அதிகளவு சக்தி இழப்புகளினால் இது சக்தித் துறைக்கு ஒரு சுமையாகவும் காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தினூடாக, ஏற்கனவேயிருக்கின்ற சக்தி வினைத்திறனற்ற மோட்டார்களுக்கு பதிலாக அதிக சக்தி வினைத்திறன் வாய்ந்த மோட்டார்களை பாவிக்கக்கூடிய வகையில் கைத்தொழில்களை ஊக்குவிப்தற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதனூடாக 248.2 ஜி.வொ.மி. மின்சாரத்தை சேமிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வர்த்தகத் துறையில் குளிரூட்டி வசதி பொருளாதார அபிவிருத்திற்கு அனுகூலமான ஒரு தெரிவாகக் காணப்படுகின்ற போதிலும் கூட, வீட்டு மற்றும் வர்த்தகத் துறைகளில் மின்விசிறிகள் இன்னும் கணிசமான ஒரு பங்களிப்பைச் செய்கின்றன. சராசரி அளவில், மின்விசிறிகள் அரச துறை அலுவலகங்களில் ஏறக்குறைய 7 - 8% இடைப்பட்டளவில் மின்சாரத்தை நுகர்கின்றன. இதே நேரம், மாதம் ஒன்றுக்கு வீட்டுத் துறையில் மின்விசிறிகளின் சராசரி மின்சார நுகர்வு 8.3 கி.வொ.ம./குடும்பம் என்ற அளவில் காணப்படுகின்றது. கூரை மின்விசிறிகள் வீடுகளில் பரந்தளவில் பாவிக்கப்படுகின்றன. இந்தக் கூரை மின்விசிறிகள் மேசை மின்விசிறி/நிறுத்திவைக்கக்கூடிய மின்விசிறி வகைகளை விடவும் கணிசமானளவு மின்சாரத்தை நுகர்கின்றன. தேசிய மின்சார நுகர்வுக்கு கூரை மின்விசிறிகளினது பங்களிப்பின் முக்கியத்தும் இனங்காணப்பட்டதன் பின்னர், நி.வ.அ.ச. SLSI நிறுவகத்தின் உதவியுடன் மின்விசிறிகளுக்கு சக்தி முத்திரையிடுவதற்கான ஒரு நியமத்தை (SLS 1600:2011) தயாரித்துள்ளது. அந்த நியமத்திற்கு இணங்க, சக்தி வினைத்திறனற்ற மின்விசிறிகள் சந்தையில் பிரவேசிப்பதைத் தடுக்கும் பொருட்டு 2013 ஆம் ஆண்டு பாராளுமன்ற்ததில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், 2020 ஆம் ஆண்டளவில் 298.3 ஜி.வொ.ம. மின்சாரத்தை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னேற்றம்:

மின்விசிறிகளைப் பரிசோதிக்கும் ஆய்வுகூடத்தைத் தாபிப்பதற்கான திட்டத்தை நி.வ.அ.ச. முன்னெடுத்துள்ளது. இந்த ஆய்வுகூட வசதி 2017 ஆம் ஆண்டு இறுதியளவில் கிடைக்கச்செய்யப்படும்.

மின்னொளியேற்றல் செயற்பாடு வர்த்தகத் துறையில் கணிசமான ஒரு பங்கை வகிக்கின்றது. இது ஏறக்குறைய 20% வீதம் என்ற அளவில் காணப்படுகின்றது. மின்னொளியேற்றலில் சக்தி வினைத்திறன் மேம்பாட்டிற்கான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சிறப்பு விடயங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். செயற்படுத்துவதற்காக செலவாகும் செலவே நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகும். EDSM பற்றிய PTF செயலணி, வர்த்தக மற்றும் கைத்தொழில் துறைகளில் பயனுள்ள கருத்திட்டங்களில் முதலிடுவதற்கு எதிர்பார்க்கின்றது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் 2020 ஆம் ஆண்டளவில் 549.1 ஜி.வொ.ம. மின்சாரத்தை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆகுசெலவு 9,610 மில்லியன் ரூபாவாகும்.

குளிரூட்டும் சாதனங்கள் அரச அலுவலகங்கள் அடங்கலாக வர்த்தகக் கட்டிடங்களில் நுகரப்படும் மொத்த மின்சாரத்தில் 50% வீதத்திற்கும் அதிகமான மின்சாரத்தை நுகர்கின்றன. இந்தக் குளிரூட்டும் சாதனங்களின் பாவனை வீட்டுத் துறையிலும் அதிகரித்தளவில் காணப்படுகின்றது. தனிப் பிளவு வகை குளிரூட்டிகளே இந்தத் துறைகளில் காணப்படும் மிகவும் பிரபல்லியமான குளிரூட்டும் சாதன வகைகளாகும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், 2020 ஆம் ஆண்டளவில் 125.4 ஜி.வொ.ம. மின்சாரத்தை சேமிக்க முடியும் என மதிப்பிபட்பட்டுள்ளது.

முன்னேற்றம்:

தேசிய மின்சார நுகர்வுக்கு குளிரூட்டிகளின் பங்களிப்பினது முக்கியத்தும் இனங்காணப்பட்டதன் பின்னர், SLSI நிறுவகத்தின் உதவியுடன் நி.வ.அ.ச. ஒரு நியமத்தைத் தயாரித்தது. இதனைத் தயாரிக்கும் பணி, பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு இறுதியளவில் நிறைவு செய்யப்படும். பொது மக்களை விழிப்பூட்டுவதும் இந்தக் கருத்திட்டத்தின் அத்தியாவசியமான அங்கமாக நோக்கப்படுகின்றது. EDSM பற்றிய PTF செயலணி, பொதுக் கட்டிடங்களில் குளிரூட்டிகளின் வினைத்திறன் வாய்ந்த பாவனையினூடாக சக்தியை சேமிப்பது தொடர்பான ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அரச துறை சக்தி முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி நடத்தப்பட்டது.

மரபுரீதியான அதிகளவு கட்டிடங்களில் வாழ்க்கை வட்டம் முழுதிலும் அதிகளவான இயற்கை வளங்களும் சக்தி வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, சுற்றாடலுக்கு பாதகமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. பாரியளவான கட்டிடங்களை உள்ளடக்குகின்ற வர்த்தக மற்றும் கைத்தொழில் துறைகள் இலங்கையின் மின்சார நுகர்வில் 60% வீதத்தை நுகர்கின்றன. கட்டிடங்களில் குளிரூட்டல் மற்றும் காற்றோட்ட வசதிகளுக்கும் மின்னொளியேற்றலுக்கும் சக்தி பிரதானமாகப் பாவிக்கப்படுகின்றது. கட்டிடங்களில் நுகரப்படும் மின்சாரத்தை சிறந்த திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றினூடாக அதிகளவில் குறைக்க முடியும்.

சக்தி வினைத்திறன் கட்டிட விதிக்கோவை, கட்டிடங்களில் சக்தி வினைத்திறன் வடிவமைப்புகளையும் ரெட்ரோஃபிட்டையும் ஊக்குவிக்கும். இது, கட்டிடங்களிலுள்ள வடிவமைப்புகளிலும் ரெட்ரோஃபிட்டுகளிலும் சக்தி வினைத்திறனுக்கான நியமங்களை விதிக்கின்ற அதே நேரம் நியம அனுசரிப்பை நிர்ணயிப்பதற்கான முறையியல்களையும் முன்வைக்கும். நி.வ.அ.ச. ஏற்கெனவேயிருக்கின்ற 2000 ஆம் ஆண்டின் மின்சார சபை சக்தி வினைத்திறன் கட்டிட விதிக்கோவையை மீளாய்வு செய்து திருத்தியதன் மூலமாக இலங்கையிலுள்ள சக்தி வினைத்திறன் கட்டிடங்கள் தொடர்பில் 2008 ஆம் ஆண்டிற்கான செயன்முறை விதிக்கோவையை வெளியிட்டது. இந்த செயன்முறை விதிக்கோவை வர்த்தகக் கட்டிடங்கள், கைத்தொழில் வசதிகள், பாரியளவான வீடமைப்புக் கட்டிடத்தொகுதிகள் என்பவற்றுக்கு ஏற்புடையதாகும். கட்டிடக் கூறுகள், கட்டிட மூடுவசதிகள், காற்றோட்ட வசதிகள், குளிரூட்டல் முறைமைகள், மின்னொளியேற்றல், சேவை, நீர் சூடாக்கல், மின்சார மற்றும் மின்சக்திப் பகிர்ந்தளிப்பு என்பவற்றை உள்ளடக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயன்முறை விதிக்கோவை ஒரு தன்னார்வ அடிப்படையில் செயற்படுத்தப்பட்டது.

முன்னேற்றம்:

கட்டிட மூலப்பொருட்கள், தொழில்நுட்பங்கள், கட்டிட செயன்முறைகள் என்பன காலங்களினூடாகப் பரிணமித்து வருகின்றன. ஆகையால், உயர் தொழில்நுட்ப புத்தாக்கங்களின் பார்வையில், கட்டிட செயன்முறை விதிக்கோவை தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படுதல் வேண்டும். ஏற்கெனவேயிருக்கின்ற குறித்த செயன்முறை விதிக்கோவையை மீளாய்வு செய்து திருத்துவதற்கான ஒரு நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சக்தி நிலவரத்திற்கு இணங்க, வீட்டுத் துறை தேசிய மின்சார நுகர்வில் 38% வீதத்திற்கு காரணமாக அமைகின்றது. அதிகளவான தற்கால நவீன வீடுகள் வாழ்க்கை வட்டம் முழுதிலும் அதிகளவு இயற்கை வளங்களையும் சக்தி வளங்களையும் பயன்படுத்துகின்றன. சக்தி வினத்திறன் வாய்ந்த மின்னுபகரணங்களின் பாவனைக்கும் சக்தி நிலைபெறுதகுதன்மைக்குமான வடிவமைப்புத் திறமுறைகளை எண்ணகருவாக உருவாக்குகின்ற வதிவிடங்களின் வடிவமைப்புத் திட்டங்களுக்கு ஈடுகொடுக்கும் சரியான காலநிலையானது பச்சை வீட்டு வாயுத் துணிக்கைகள் குறைவின் காரணமாக உள்ளூர் ரீதியிலும் பூகோள ரீதியிலும் சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளை கணிசமானளவு தணிக்கும்.

ஆதலால், பெரும்பான்மையான வதிவிடம் சார்ந்த வடிவமைப்புத் திட்டங்கள் உள்நாட்டுக் காலநிலைக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஆற்றலற்றதாகக் காணப்படுகின்றன. நிலவுகின்ற காலநிலையுடன் முரண்பட்டுள்ள வடிவமைப்பு சார்ந்த சிக்கல்கள் உட்புறங்கள் வெப்பமாகுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. இதனால் உள்ளக ரீதியில் குளிரையும் சௌகரிகத்தையும் ஏற்படுத்துவதற்கு அதிக மின்சாரம் தேவைப்படுகின்றது. வதிவிடங்களில் காணப்படும் அளவுகளில் வித்தியாசப்படுகின்ற இந்த நிலை அதிகளவு சக்தி வீண்வீரயத்திற்கும் அதே நேரம் அனல் ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்ற சக்தியில் கணிசமானளவு தங்கியிருப்பதற்கும் காரணமாக அமைகின்றது. ஆதலால், ‘நிலைபெறுதகு சக்தி வதிவிடத்திற்கான’ ஒரு வழிகாட்டியை அறிமுகப்படுத்தி அந்த வழிகாட்டலை நடைமுறைப்படுத்துவது மிக முக்கியமாகும்.

இது தவிர, வீட்டுக் கூரைகளில் நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி PV முறைமைகளில் ஒருமுகப்படுகின்ற குறித்த ஸ்மார்ட் ஹோம் முன்னெடுப்புத் திட்டம் 2020 ஆம் ஆண்டளவில் 139.2 ஜி.வொ.ம. மின்சார வீண்விரயத்தைக் குறைக்கக்கூடும். அத்துடன், இது பகல் நேரத்தில் க்றிட் மின்சார உற்பத்தியில் 100 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறன் வித்தியாசத்திற்கும் வழிவகுக்கும். 2016-202 எனும் ஐந்து ஆண்டுகளுக்கு தவிர்க்கப்படும் மின்சக்தியின் தற்போதைய தேறிய பெறுமானம் 591 ஜி.வொ.ம. என்ற அளவில் காணப்படும். அடுத்து வரும் இருபது ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, இந்த மின்பிறப்பாக்கிகளிலிருந்து வரும் சமப்படுத்தப்பட்ட சக்தி ஆகுசெலவு ரூ. 21-25 கி.வொ.ம. என்ற அளவில் காணப்படும்.