காபனீர் ஒட்சைட்டின் (CO2) சகல வெளியீடுகளினதும் அளவுகளே உங்களின் காபன் தடமாகும். அத்தகைய காபனீர் ஒட்சைட்டு வெளியீடுகள் உங்களின் செயற்பாடுகளினால் உருவாகியவை. இவை, வழமையாக ஒரு ஆண்டு காலப்பகுதிற்கு கணிப்பிடப்படுகின்றது.
அநேகமாக எதனை நீங்கள் வெளியிட்டாலும் அதில் ஓரளவு காபனீர் ஒட்சைட்டு இருக்கும். CO2 ஒரு பச்சைவீட்டு வாயுவாகும். நாம் எமது புவியையும் வளிமண்டலத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் வெளியிடுகின்ற காபனீர் ஒட்சைட்டுக்களின் அளவை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். CO2 ஐ குறைக்க வேண்டுமானால், நாம் எந்த அளவில் அதனை உருவாக்குகின்றோம் என்பதை முதலில் அறிய வேண்டும். இந்தப் பிரச்சினை விடயத்தில் உங்களுக்கு உதவும் பொருட்டு, நி.வ.அ.ச. மைக்ரோசொப்ட் எக்ஸெல் ஸ்ப்ரெட் அட்டைப் பிரயோகத்தில் ‘இலகுவாக உபயோகிக்கக்கூடிய’ ஒரு காபன் கணிகருவியைத் தயாரித்துள்ளது.
அந்தக் கணிகருவி சாதனத்தை நீங்கள் இங்கு கீழிறக்கிக்கொள்ளலாம். இதனை உபயோகிப்பதில் ஏதாவது கடினங்கள் என நீங்கள் கண்டால், தயவுசெய்து carbon@energy.gov.lk என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் செய்தியை அனுப்புங்கள், நாம் உங்களுக்கு தாராளமாக உதவுவதற்கு ஆயத்தமாகவுள்ளோம்.
எங்களது செயற்பாடுகள் எவ்வாறு பங்களிக்கும்?
நீங்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளிலிருந்து வெளியாகும் CO2 அந்தச் செயற்பாட்டின் பருமனையும் வலிமையையும் பொறுத்து வேறுபடும். உதாரணமாக, நீங்கள் கார் வண்டியில் பாடசாலைக்கு போனால், அதனால் சுற்றாடலுக்கு நீங்கள் ஏற்படுத்தும் பங்களிப்பு நீங்கள் பேரூந்தில் அல்லது புகையிரத்தில் அல்லது ஒரு பாடசாலை வேனில் பாடசாலைக்கு செல்வதால் ஏற்படுத்தும் பங்களிப்பை விடவும் அதிகமாகும். நீங்கள் செல்லும் பாடசாலைக்கு, உங்கள் வீட்டிலிருந்து 10 கி.மீ. தூரம் இருக்கின்றது என வைத்துக்கொள்வோம், அவ்வாறென்றால், நீங்கள் கார் வண்டியில் செல்வதாகவிருந்தால் அந்த வண்டியில் நான்கு பேர்களுக்கு அதிகம் பயணிக்க முடியாது. ஆதலால், ஒரு தனி நபர் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கணிப்பிடுவதற்கு அந்தக் கார் வண்டியிலிருந்து வெளியிடப்படும் காபனீர் ஒட்சைட்டு நான்கினால் வகுக்கப்படும். அதே போன்று, நீங்கள் இந்த அளவான தூரத்தை பேரூந்தின் மூலம் பயணிப்பதாகவிருந்தால், அந்தப் பேரூந்தில் ஏறக்குறைய 80 பயணிகள் பயணிக்கலாம். ஆகையால், ஒரு தனிநபர் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கணிப்பிடுவதற்கு, அந்தப் பேரூந்திலிருந்து வெளியாகும் காபனீர் ஒட்சைட்டு அளவு 80 ஆல் வகுக்கப்படும். எனவே, நீங்கள் அதிகளவில் பொதுப் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவீர்களானால், உங்களால் சுற்றாடலுக்கு பயனுள்ள விதத்தில் சாதகமாகப் பங்களிக்கலாம்!
பின்வருவன பல வகையான கணிய எண்ணெய்களிலிருந்தும் மின்சாரத்திலிருந்தும் வெளியாகும் காபனீர் ஒட்சைட்டுக்களின் அளவுகளாகும். இலங்கையில், மின்சாரம் எரி எண்ணெய்யினாலும் நிலக்கரியினாலும் உற்பத்தி செய்யப்படுவதை நீங்கள் அவதானிக்கலாம். ஆகையால், இது எப்பொழுதும் உங்களுக்கு ‘தெளிவாக’ இருக்கும். சில செயற்பாடுகளும் சாதாரணமாக அத்தகைய செயற்பாடுகளிலிருந்து வெளியாகும் காபனீர் ஒட்சைட்டுக்களின் அளவுகளும் பற்றிய விபரங்கள் கீழ்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எரிபொருள் | அலகு | CO2 வெளியீடுகள் |
---|---|---|
மின்சாரம் | கி.கி./கி.வொ.ம. | 0.71 |
டீசல் | கி.கி./லீற்றர் | 2.74 |
கசலைன் | கி.கி./லீற்றர் | 2.28 |
LPG எரிவாயு | கி.கி./கி.கி. | 2.73 |
மண்ணெண்ணெய் | கி.கி./லீற்றர் | 2.52 |
எரிவிறகு | கி.கி./கி.கி. | 1.51 |