வலையமைப்பு செய்தல்




உங்கள் அனுபவம்

உங்களிடம் சக்தி தொடர்பான ஏதாவது இனிமையான அனுபவம் ஏதும் இருக்கின்றதா? அவ்வாறெனில், தயவுசெய்து அத்தகைய அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களிடமுள்ள அத்தகைய அனுபவத்தைப் பிரதிபலிக்கும் படங்கள் ஏதுமிருப்பின் அவற்றின் தலைப்புகள், திகதி மற்றும் உங்களுடன் தொடர்புகொள்ளக்கூடிய விபரங்கள் முதலியவற்றுடன் எமக்கு அனுப்பு வையுங்கள். நாம் அவற்றை மீளாய்வுசெய்து உங்களுக்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் அவற்றை பிரசுரிப்போம்.

இறுதி மண்ணெண்ணெய் மாட்டு வண்டி

இது அநேகமாக இலங்கையில் மண்ணெண்ணெய்யை எடுத்துச்சென்று வணிகம் செய்வதற்கு இறுதியாகப் பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டியாகும். இதன் புகைப்படம் கொழும்பு 7, கேம்பிரிஜ் பிளேஸில் அமைந்துள்ள EDSM பற்றிய PTF செயலணியின் அலுவலகத்திற்கு முன்னால் எடுக்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி வீட்டுத் தேவைகளுக்காக அதாவது குறிப்பாக சமையலுக்கு அவசியமான மண்ணெண்ணெய்யை எடுத்துச்சென்று நுகர்வோருக்கு பகிர்ந்தளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. இது இலங்கையின் நகரப்புற மக்களுக்கு, பொதுவாக எரிவாயு உருளைகள் என அழைக்கப்படுகின்ற போத்தல்களில் அடைக்கப்பட்ட திரவநிலை பெற்றோலிய எரிவாயு (LPG) அறிமுகமாகிய காலத்திற்கும் நகர எரிவாயு வலையமைப்பு தோன்றிய காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பரிட்சயமான ஒரு வசதி முறைமையாக காணப்பட்டது. சமையலுக்கான எரிபொருளாக மண்ணெண்ணெய்யை பாவிக்கும் பழக்கும் நாட்டில் தொடர்ச்சியாக அரிதாகி வருகின்றது. முழு நாட்டிற்கும் தற்பொழுது க்றிட் மின்சாரம் கிடைப்பதால், ஒளியேற்றல் தேவையில் மண்ணெண்ணெய்யின் பாவனை அநேகமாக இல்லாது போய்விட்டது.

 

புகைப்படம்: DSM பதவியணி, 2017 யூலை

 

எரிவிறகு

இது ஹிக்கடுவையிலுள்ள ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட காய்ந்த கறுவா மர எரிவிறகுக் குவியல்களின் புகைப்படம். எரிவிறகு என்பது சுற்றாடல் ரீதியில் கிடைக்கின்ற ஒரு வகையான சக்தி மூலவளமாகும். எனினும், அதன் பாவனைக்கு பதிலாக LP எரிவாயு போன்ற மிகவும் செகளரிகமான சக்தி மூலவளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நி.வ.அ.ச., UNDP நிகழ்ச்சித்திட்டத்துடன் கூட்டிணைந்து அத்தகைய வளங்களை அவற்றின் விநியோக சங்கிலிகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் கைத்தொழில் துறையில் சந்தைகளுக்கு இணைக்கும் நோக்கில் ஒரு கருத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

புகைப்படம்: DSM பதவியணி, 2017 மே

 

இன்கன்டஷன்ட் மின்குமிழ்களை அவற்றின் பாவனையிலிருந்து அகற்றுதல்

இன்கன்டஷன்ட் மின்குமிழ்கள் இலங்கையில் கட்டம் கட்டமாக அவற்றின் பாவனையிலிருந்து அகற்றப்பட்டு வருகின்றன. இன்றும் கூட அத்தகைய மின்குமிழ்கள் பல இடங்களில் பாவிக்கப்படுவதை அவதானிக்கலாம். இது ஒரு பொது இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். உண்மையிலேயே உங்களுக்கு தேவையான நேரத்தில் மாத்திரம் மின்குமிழ் ஒளியைப் பயன்படுத்துங்கள். தேவையற்ற நேரத்தில் பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. இன்கன்டஷன் மின்குமிழ்களும் மோசமான அளவில் மின்சாரத்தை நுகரும். இன்கன்டஷன் மின்குமிழ்களின் பாவனையை ஒழித்தால் வருடாந்தம் 420 ஜி.வொ.ம. மின்சாரத்தை சேமிக்கலாம். இது EDSM பற்றிய PTF செயலணியினது ஒன்பது பிரிவுகளில் ஒரு பிரிவாகும். வதிவிட நோக்கத்திற்காக பயன்படுத்தும் சகலருக்கும் தமது இன்கன்டஷன் மின்குமிழ்களை LED மின்குமிழ்களுக்கு பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பு இந்த முயற்சி முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் கிட்டும்.

புகைப்படம்: DSM பதவியணி, 2017 யூலை

 

புகையிரதம் மூலம் எடுத்துச்செல்லப்படும் எரிபொருள்

இது அம்பலாங்கொடவில் எடுக்கப்பட்ட புகைப்படம். எமது நாட்டின் அளவுக்கு, கிடைக்கக்கூடிய புகையிரத வலையமைப்பு அதி பிரமாண்டம். எனினும், பல ஆண்டுகள் பாராதீனப்படுத்தப்பட்டமை மற்றும் முன்னுரிமைகள் நகர்த்தப்பட்டமை ஆகிய காரணங்களினால், இத்தகைய பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் கடுமையாக பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன. புகையிரத வலையமைப்பை பயன்படுத்தி எரிபொருளை எடுத்துச்செல்வது 50% வீதத்திற்கு குறைவாக இருக்கின்றது. இது வீதியில் செல்லும் அத்தகைய எரிபொருள் எடுத்துச்செல்லும் அதிகளவான கொள்கலன் ட்ரக் வண்டிகளுக்கு வழிவகுக்கின்றது. வீதி வழியாக எரிபொருளை எடுத்துச்செல்லும் முறை வினைத்திறனற்ற முறையாகும். அதனால், இது தேசிய சொத்துக்களை வீண்விரயமாக்கும். அது மட்டுமன்றி கடுமையான வீதிப் போக்குவரத்து நெரிசலுக்கும் காரணமாக அமையும்.

 

புகைப்படம்: பதவியணி, 2017 யூலை

 

பாரம்பரிய மட்பாண்டக் கைத்தொழில்

இது கேகாலையிலுள்ள ஒரு நகரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தக் கிராமத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பாரம்பரிய மட்பாண்டக் கைத்தொழில் இருந்து வருகின்றது. இந்த மட்பாண்டங்கள் கையால் தயாரிக்கப்பட்டவை. இவை சூழை என்று சொல்லக்கூடிய ஒரு வெப்ப வசதியில் இட்டு சுட்டு வார்த்தெடுக்கப்படுகின்றன. இந்தப் பாரம்பரிய கைத்தொழிலில் ஈடுபடுபம் வறிய மக்களுக்கு தமது மட்பாண்ட சூழைகளை மேம்படுத்துவதற்கும் கைத்தொழிலை வளம்பெறச் செய்வதற்கும் அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும்.

   

புகைப்படம்: DSM பதவியணி, 2017 செப்டம்பர்

 

மரத்தூள் அடுப்புகள்

மரத்தூள் அடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து மிரிஸ்ஸவிலுள்ள மாசிச்சம்பல் (மாசி) தயாரிப்பு அதிகளவில் மேம்பட்டுள்ளது. மரத்தூள் அடுப்புகளின் பாவனை, மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருள் என்பவற்றின் வீண்விரயத்தைக் குறைப்பதற்கும், இந்தக் கைத்தொழிலின் சுகாதார நியமங்களை மேம்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது.

புகைப்படம்: DSM ஊழியர்கள், 2017 பெப்ருவரி