சக்தி ரீதியான சொப்பிங்




மின்னுபகரணங்களை சொப்பிங் செய்யும் போது, சக்திக் காரணிகள் பற்றி கருத்திற்கொள்ள வேண்டும். ஆகவும் பழைமை வாய்ந்த குளிர்சாதனப் பெட்டியை அல்லது துரிதமாக சுழலும் கூரை மின்விசிறிகளை வாங்கி வீட்டில் பாவிப்பதால் அதற்கு அதிக மின்சாரத்தையும் பணத்தையும் செலவு செய்ய நேரிடும். ஆனால், அவ்வாறு செய்தால். நீண்டகால இயக்கத்தில், வினைத்திறன் வாய்ந்த மின்னுபகரணம் அதற்கு பதிலாக தேவைப்படும். அதன் போதும் அதற்காக செலவு செய்ய வேண்டும். ஆதலால், சிந்தித்து செயல்பட்டால் உங்கள் பணத்தை நீங்கள் சேமித்துக்கொள்ளலாம். அதிகளவான சக்தியை சேமிக்கும் வகையில் உங்களுக்கு உதவக்கூடிய செவ்வைபார்த்தல் பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • நீங்கள் அதனை உண்மையிலேயே வாங்க வேண்டுமா?

வெறுமனே விளம்பரத்திற்காக அல்லது எனது அயலவர்களிடமும் இருக்கின்றது என்பதற்காக வாங்குகின்றேனா? அல்லது உண்மையிலேயே தேவைதானா?

  • பொருத்தமான பருமனுடைய அத்தகைய உபகரணங்களை வாங்குதல்

உங்களுக்கு உண்மையிலேயே தேவையான பருமனை விடவும் அதிக பருமனுடைய மின்னுபகரணங்களை அல்லது தேவைக்கு அதிகமான சக்தி வாய்ந்த மின்னுபகரணங்களை வாங்ககக்கூடாது.

  • வாங்கும் போது சக்தி மற்றும் சுற்றாடல் முத்திரைகளையுடையனவா என பார்த்து வாங்குதல்.

பொதுவாக வீட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்குமிழ்கள், கூரை மின்விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டி இயந்திரங்கள் மற்றும் கணனிகள் ஆகிய அனைத்து உபகரணங்களிலும் சக்தி முத்திரைகள் பதிக்கப்பட்டிருக்கும். நீங்கள் சக்தி வினைத்திறன் வாய்ந்த ஒரு மின்னுபகரணத்தை வாங்குகின்றீர்களா என உறுதிசெய்துகொள்ளுங்கள். அந்த உபகரணங்கள் ஆரம்பத்தில் விலை அதிகமாக இருந்தாலும், பின்னர் நீண்டகாலப் பாவனையில் அவற்றின் மூலம் அதிகளவு பணத்தை சேமிக்கலாம். சக்தி சேமிப்பு சிறப்பம்சங்களையும் வடிவமைப்புகளையும் கருத்திற்கொள்ளல். நீங்கள் விலையையும் செயல்திறனையும் சரிபார்ப்பது போது மின்னுபகரணங்களின் சக்தி சிறப்பம்சங்களையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். எத்தகைய சிறப்பம்சங்கள் சக்திப் பாவனையை அதிகரிக்கும் என தேடிப்பார்த்து உண்மையிலேயே அத்தகைய சக்தி சிறப்பம்சங்களுடைய மின்னுபகரணங்கள் தேவைதானா என சிந்தித்துப் பார்த்து வாங்குங்கள். உதாரணமாக, துணிகளை உலர்த்தும் இயந்திரம் 5,000 வொட் மின்சாரத்தை நுகரலாம், அதே நேரம் ஆடைகள் சலவை இயந்திரம் வெறுமனே 550 வொட் மின்சாரத்தை மட்டும் நுகரலாம். சில மின்னுபகரணங்கள் விஷேட வெப்ப சாதனங்கள் போன்ற விஷேட சக்தி சேமிப்பு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும்.

  • ஒத்திட்டுப் பார்த்து சொ்பபிங் செய்தல்

அநேகமான மின்னுபகரணங்களை வாங்குவதற்கு நாம் சந்தைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகையால், அந்த உபகரணங்களில் விலைகளை நாம் ஒத்திட்டுப் பார்ப்பது எமது பொறுப்பு. கவனமாகப் பார்த்து கொள்வனவு செய்வதானது காலம், நேரம், சௌகரிகம், பணம், சக்திப் பாதுகாப்புக் காரணிகள் போன்ற அம்சங்களை சமப்படுத்தும். சிறப்பம்சங்கள் ஒரேமாதிரியாக இருந்தாலும், மின்னுபகரங்கள் வித்தியாசமான அளவுகளில் கணிசமான மின்சாரத்தை நுகரும்.