வீடுகளில் பாவிக்கப்படும் மின்னுபகரணங்கள்




பொதுவாக வீடுகளில் பாவிக்கப்படும் மின்சார உபகரணங்களை நீங்கள் கொள்வனவு செய்யும் நேரத்தில் ஒரு சில முக்கியமான குறிப்பு விடயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த உபகரணங்களில் பாவனையைத் திட்டமிடுவதும் முக்கியமானதாகும். சக்தி வினைத்திறன் வாய்ந்த ஒரு திட்டத்தின் அடிப்படையில் நிர்ணயித்து மின்னுபகரணங்களை நீங்கள் வாங்குவதற்கு பின்வரும் குறிப்புகள் உதவும்.

உமிழ்வு அடுப்புகள்

சக்தி வினைத்திறன் வாய்ந்த இயக்கத்தின் நிமித்தம் அடுப்பின் ஆகக்கூடிய கொள்ளளவுக்கு மின்சாரப் பளுவை வழங்க வேண்டும்.

அடிக்கடி கதவுகளை திறக்கக்கூடாது. நீங்கள் திறக்கும் ஒவ்வொரு நேரத்திற்கும் 25 பாகை பர்னைட்டு அளவால் வெப்பம் குறையும்.

குறித்த நிறைவு நேரத்திற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் அடுப்பின் இயக்கத்தைத் துண்டித்துவிடுதல். சூடாக்க அல்லது வேகவைக்க வேண்டிய கலவைகள் பதார்த்தங்கள் அடுப்பின் வெப்பம் தணியும் வரை தொடர்ச்சியாக வேகும். மாறாக, அடுப்பிலிருந்து வரும் மேலதிக வெப்பத்தை ஏனைய உணவுப் பொருட்களை முன்கூட்டி சூடாக்குவதற்கும் பயன்படுத்தலாம்.

ஒரு கை்ரோ அடுப்பு விரைவில் சமையக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. ஆகையால் சக்திப் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் அது மிகச்சிறந்த ஒரு அடுப்பு வகையாகும். ஆனால் அந்த அடுப்பு வகையின் விலை சற்று அதிகமானது. மைக்ரோ அடுப்புகள் எரிவாயுவில் இயங்கும் முதலாம் தலைமுறை அடுப்புகளுக்கு துரித பிரதியீட்டு அடுப்புகளாக வருகின்றன.

சில உற்பத்தித் தரப்புகள் முன்கூட்டி சூடாக்கும் அடுப்புகளை சிபாரிசு செய்திருக்கின்றன. முன்கூட்டி சூடாக்கும் அடுப்புகளை கூடுமான வரையில் குறைந்தளவில் பாவிக்க அல்லது அவற்றை பாவிப்பதிலிருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கலப்பான்கள் மற்றும் பழச்சாறடிப்பான்கள் (Mixers and Juicers)

வித்தியாசமான பாவனைகளுக்கு ஏற்றவாறு வித்தியாசமான சரியான வெட்டு சாதனத்தைப் பயன்படுத்துதல். உற்பத்தித் தரப்புகளின் தகவுதிறன் சிபாரிசுகளை பின்பற்றுதல்.

கலப்பான்களை (mixers) அவ்வப்பொழுது குறைந்த அளவுகளுக்காக அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்த்து அவற்றின் ஆகக்கூடிய கொள்ளளவில் பயன்படுத்தக்கூடிய ஒரு வழியில் திட்டமிட்டு பயன்படுத்துதல். மசாலாத் தூள்கள், சக்கரை, மிளகாய், மல்லி முதலியவற்றை வாராந்தம் தேவைப்படும் அளவுக்கு வாரத்திற்கு ஒரு தடவை அல்லது உங்களின் தேவைக்கு எற்ப அரைத்துக்கொள்ளல்.

கொள்கலன் விளிம்பு வரை நிரம்பாதிருக்கின்றதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளல். இல்லையெனில், கலப்பான் இயங்கும் போது திரவ சிதறல் மேலதிகமாக வெளியாகும். அவ்வாறு வெளியாகும் திரவம் கலப்பானிளுள்ள மோட்டாரினுள் சென்று அதனைப் பழுதடையச் செய்யலாம்.

கலப்பானில் அளவுக்கதிகமான சுமையை ஒரு போதும் திணிக்கவோ அல்லது அதனை முழுமையாக நிரப்பவோ கூடாது. அவ்வாறு செய்வதால், தேவையற்ற விதத்தில் மோட்டாரில் பளு ஏறும். இந்த செயற்பாடு கொள்கலனின் அடியிலுள்ள இறப்பர் சொக்கெட்டு அழுத்தமடைந்து தேய்ந்து போகும். அதனால், இது அதனை அடிக்கடி மாற்றுவதற்கு காரணமாக அமையும்.

கலப்பானை இயக்கும் பொருட்டு குளிர்சாதனப் பெட்டிகளுக்கு அல்லது ஏனைய மின்னுபகரணங்களுக்கு ஒரேநேரத்தில் பயன்படுத்தப்படும் அதே வகையான சொக்கெட்டை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது. உடனடியாக அதிகளவு மின்சாரம் பாய்ந்து மின்னுபகரணங்களிலுள்ள மின்சாரப் பாகங்கள் பழுதடையலாம்.

சூடாக்கிகளும் கொதிகலன்களும்

டெப்பில் குளிப்பதை விடவும் சவரில் குளிப்பது அதிகளவு நீர் சிக்கனத்திற்கு பயனாக அமையும். ஒரு சவர்ஹெட்டினின் செலவை ஒருசில மாத காலங்களில் மீட்டிக்கொள்ளலாம்.

சூடாக்கிகளில் அல்லது கொதிகலன்களில் தண்ணீரை இட்டு சூடாக்குவது அதிகளவு மின்சாரத்தை நுகரும். மின்சார சூடாக்கிகள் 2,000 - 3,000 W என்ற அளவில் மின்சாரத்தை நுகரும். 3,000 W அளவான சூடாக்கிகள் 50 லீற்றர் நீர் 35 பாகை வெப்பத்தில் கொதித்து சூடாகுவதற்கு 50 நிமிடங்களை எடுக்கும். அதே வேலையைச் செய்வதற்கு, 2,000 W அளவான சூடாக்கி 75 நிமிடங்களை எடுக்கும்.

உடனடியாக சூடாகக்கூடிய ஒரு சூடாக்கிக்கு பதிலாக ஒரு வெப்பக் களஞ்சிய சூடாக்கியை பயன்படுத்துவது நல்லது. சக்தி வினைத்திறன் வாய்ந்த நீர் சூடாக்கிகள் அடிப்படை ரீதியில் சற்று விலை அதிகமாக இருந்தாலும், இயக்க ஆகுசெலவுகளை குறைத்துள்ளன.

சூடாக்கியின் வெப்ப செட்டிங்களை செவ்வைபார்த்தல். உற்பத்தித் தரப்புகள் ஆரம்பத்தில் நுகர்வோர் விரைவில் சூடாகுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்பதற்காக உயர்ந்த நிலையில் செட்டிங்களை செய்யலாம்.

ஆண்கள் சுடு தண்ணியில் குளிப்பதாக இருந்தால் சாதாரணமாக 40 பாகை செல்சியஸும் பெண்கள் குளிப்பதாக இருந்தால் 50 பாகை செல்சியஸும் போதுமானதாகும். உங்களுக்கு தேவையான வெப்பநிலையின் அளவுக்கு வெப்பசாதனத்தை உங்களின் உள்ளூர் மின்னியலாளரைக் கொண்டு சரிபடுத்திக் கொள்ளலாம்.

வெளிப்புற செல்லிலுள்ள சரியான இன்சியுலேஷனுடைய ஒரு சூடாக்கியை வாங்குதல். சூடாக்கியிலிருந்து வரும் குழாயை டெப்புகளுக்கு இன்சியுலேட்டு செய்தல் அல்லது அத்தகைய குழாய்களை சுவரினுள் மறைத்துவிடுதல். உங்களிடமுள்ள நீர் சூடாக்கி தற்பொழுது சரியான முறையில் இன்சியுலேட்டு செய்யப்படவில்லையெனில், அதனை சுற்றி போதியளவு இன்சியுலேஷன் செய்ய வேண்டும்.

நீர் சூடாக்கி ட்dராப்fட்டிலிருந்து அப்பால் வைக்கப்பட்டுள்ளதா என்பதை நிச்சயப்படுத்திற்கொள்ளல்.

சூடாக்கியின் உட்புறத்தில் மேலேறுகை நிகழாதிருக்கின்றதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளல். காரணம், அது ஒரு தடையாகத் தொழிற்படும். நீரின் தரம் கடினமாக இருக்கும் நேரத்தில், வினைத்திறன் வாய்ந்த பாவனைக்கு அந்த மேலேறுகையை வழமையான காலப்பகுதியில் குறைக்க வேண்டும்.

சூடாக்கியிலுள்ள சூடாக்கும் பாகம் தடுப்பை உருவாக்கும் என்பதால் ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு ஒரு தடவை அத்தகைய பாகங்களை மாற்றி பிரதியிட்டுக்கொள்ள வேண்டும்.

எரிவிறகிலிருந்து அல்லது எரிவாயு அடுக்களிலிருந்து நீரை சூடாக்குவது ஒப்பீட்டளவில் மின்சார சூடாக்கிகளிலிருந்து நீரை சூடாக்குவதை விடவும் அதிக சக்தி சிக்கனமானதாகும்.

சூரிய சக்தி நீர் சூடாக்கிகள் அவற்றில் எரிபொருள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் எப்பொழுதும் உணர்வுபூர்வமான ஒரு தெரிவாக அமையும். சூரிய சக்தி முறைமை நிறுவப்பட்டால், இயக்க ஆகுசெலவு இருக்காது.