கூரை மீது நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அரச துறை சூரிய சக்திமூல மின்னுற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் - சூரியபள சங்கிராமய




தேர்ந்தெடுக்கப்பட்ட அரச துறைக் கட்டிடங்களில், கூரையில் நிறுவி சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி முறைமைகளை நிறுவும் பொருட்டு அரசாங்கம் 350 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகையில் 75% நிதி அரசாங்க வைத்தியசாலைகளுக்காக செலவிடப்படும். எஞ்சிய நிதித் தொகை பிரதானமாக பாடசாலைகளுக்காக செலவிடப்படும். ‘சூரியபள சங்கிராமய’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், அரச துறை நிறுவனங்களுக்கு சூரிய சக்தி உற்பத்தி முறைமைகளை வழங்குவதற்கான கருத்திட்டம் தொடர்பில் கேள்வி விலை மனுக்கள் அழைக்கப்பட்டன. இது பற்றி 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி விளம்பரம் செய்யப்பட்டது. கேள்வி விலை மனுக்கள் 2017 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 04 ஆம் திகதி மூடப்பட்டன. இதனூடாக, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சூரிய சக்தி உற்பத்தி முறைமைகளை விநியோகிக்கும் தரப்புகளின் பட்டியலிலிருந்து அத்தகைய விநியோகத் தரப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.

கருத்திட்டத்தின் நிதிகளை இந்த ஆண்டு செலவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.