காலநிலை மாற்றம்




காலநிலை உண்மையிலேயே மாற்றமடைகின்றதா?

ஆம், உண்மையில் மாற்றடைகின்றது. உண்மையில், பார்த்தளவில், வரலாற்று முழுதிலும் புவி மாற்றமடைந்து வருகின்றது. புவி இன்றும் அவ்வாறு தொடர்ந்து மாற்றமைந்து வருகின்றது. ஆனாலும், இத்தகைய மாற்றங்கள் வித்தியாசமான காலப்பகுதிகளில் வித்தியாசமான காரணிகளினால் ஏற்பட்டுள்ளன. கடந்த காலத்தில் இயற்கை நிகழ்வுகள் இத்தகைய காலநிலை மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தன. எனினும், அண்மை காலங்களில், மனிதனின் செயற்பாடுகள் காரணம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். உலகை சூழ நிகழ்கின்ற அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள் வளியில் அதிகளவான பச்சைவீட்டு வாயுக்களை சேர்ப்பதற்கு பங்களித்துள்ளன என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். இந்த வாயுக்கள் காலநிலையில் துரிதமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்தவை.

பச்சைவீட்டு வாயுக்கள் வளிமண்டலத்திலுள்ள வெப்பத்தை உறிஞ்சும் ஆற்றலுடயவை. காபனீர் ஒட்சைட்டு (CO2), மெதேன் (CH4), நைதசரன் ஒட்சைட்டு (N2O) மற்றும் ஃப்ளோரின் வாயுக்கள் என்பன வளிமண்டலத்திலுள்ள பிரதான வாயுக்களாகும்.

CO2 கனிய எண்ணெய்கள் (எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி) எரிதல், திண்மக் கழிவுகள், மரங்கள் மற்றும் மர உற்பத்திகள் என்பவற்றினூடாக வழிமண்டலத்தினுள் கலக்கின்றது. CO2 பச்சைத் தாவரங்களினால் அவற்றின் ஒளிச்சேர்க்கைக்காக வளிமண்டலத்திலிருந்து உறிஞ்சப்படுவதன் மூலம் அகற்றப்படுகின்றது அல்லது பிரிந்துசெல்கின்றது.

கால்நடைகளிலிருந்தும் ஏனைய விவசாய செயன்முறைகளிலிருந்தும் அதே நேரம் மாநகரத் திண்மக் கழிவுப் பகுதிகளிலுள்ள கரிமக் கழிவுகள் முதலியவற்றிலிருந்தும் CH4 வெளிவிடப்படுகின்றது.

விவசாய மற்றும் கைத்தொழில் செயற்பாடுகளின் போதும் கனிய எண்ணெய்களினதும் திண்மக் கழிவுகளினதும் எரிதகனத்தின் போதும் N2O வெளியிடப்படுகின்றது.

ஹைட்ரோஃப்ளோரோகார்பன்கள், பெர்ஃப்ளோரோகார்பன்கள் மற்றும் சல்பர் ஹெக்ஸ்சுளோரைடு போன்ற ஃப்ளோரின் வாயுக்கள் பல வகையான கைத்தொழில் செயற்பாடுகளிலிருந்து வெளியிடப்படும் சக்தி வாய்ந்த செயற்கைப் பச்சைவீட்டு வாயுக்களாகும்.

இந்த ஃப்ளோரின் வாயுக்கள் சில நேரங்களில் ஓசோன் படலத்தை சிதைவுபடுத்தும் பதார்த்தங்களுக்கான பிரதியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாயுக்கள் வழமையாக சிறிதளவில் வெளியிடப்பட்டாலும், வலிமையான பச்சைவீட்டு வாயுட்கள் என்பதால் அதிகளவில் புவியை வெப்பமடையச் செய்யக்கூடிய சாத்தியம் (GWP) வாய்ந்த வாயுட்களாகக் கருதப்படுகின்றன.