உணவு சமைத்தல்




இது எமது மரபு ரீதியான சமையல் முறைகளில் நாம் அதிகளவு சவால்களை எதிர்நோக்கும் காலம்!

20 - 4 நிமிட சமையல் கலை பற்றி உங்களுக்கு தெரியுமா? அது முயற்சி செய்து பரிசீலிக்கப்பட்டுள்ளது.

  • மரக்கறி, இறைச்சி, மீன் முதலியவற்றை துண்டுகளாக வெட்டி அவற்றை பதப்படும் வரை ஊறவிடுதல்.
  • மிளகாய் தூளையும் ஏனைய மசாலாத் தூள்களையும் கலவைகளையும் சேர்த்தல்.
  • அடுப்பை முடுக்கிவிட்டு வெட்டிய இறைச்சித் துண்டுகளையும் மரக்கறித் துண்டுகளையும் வேகவிடுதல்.
  • அதே நேரத்தில் அரிசியைக் கழுவுதல்.
  • அதிக வெப்பம் தேவை என்பதால் இறைச்சியை முதலில் சமைக்கத் தொடங்குதல், அதன் பின்னர் குறைந்த வெப்பம் தேவையான மரக்கறியை வேகவைத்தல்.

பொரித்தல் >> அவித்தல்>> கறிகளை சமைத்தல் >> கீரைகளை வேகவைத்தல்

சக்தி வினைத்திறன் வாய்ந்த அடுப்புகளைத் தேர்ந்தெடுத்தல்.

  • சக்தி வினைத்திறன் வாய்ந்த அடுப்புகளைத் தேர்ந்தெடுத்தல்.
  • 87% வீதமான வீடுகளில் சமையலுக்கு எரிவிறகு பயன்படுத்தப்படுகின்றது.
  • நுகரப்படும் மொத்த LP எரிவாயுவில் 84% வீட்டுப் பிரயோகங்களுக்காக நுகரப்படுகின்றது.
  • எரிவிறகு அடுப்புப் பாவனையிலும் சக்தி வினைத்திறனற்ற LP எரிவாயு அடுப்புப் பாவனையிலும் பூர்வாங்க ஆரம்பத் தொழில்நுட்பங்கள் பயன்படுவதால் வீட்டு சமையல்களின் போது அதிகளவான சக்தி வீண்விரயமாகுகின்றது.

பாரம்பரிய மூன்று-கல் சமையலடுப்பு

  • மிகவும் சக்தி வினைத்திறன் குறைந்தது - 5 - 8%

அனகி அடுப்புe

  • சக்தி வினைத்திறன் வாய்ந்தது - 17 - 20%

Efficiency can be maximised by

  • Using both burners at once
  • Burning woodchips
  • Pairing burners with proper sized utensils
  • Ensuring adequate ventilation

LP எரிவாயு சமையலடுப்புகள்

  • சக்தி வினைத்திறன் வாய்ந்தவை - எரிவிறகு அடுப்புகளை விடவும் சக்தி வினைத்திறன் அதிகம்.

சக்தி வினைத்திறன் வாய்ந்தவை - எரிவிறகு அடுப்புகளை விடவும் சக்தி வினைத்திறன் அதிகம்.

  • Adjusting the burne to get a blue flame
  • Pairing burners with proper sized utensils
  • Minimising the height between the flame and pan
  • Keeping burners clean

Induction cookers

The key to efficient cooking is, understanding your cooking habits

  • Hit the right balance

சமையல் முறையை உணவுடன் பொருந்தச் செய்தல். பாணை சூடாக்க முடியாத ஒரு சூடாக்கி அடுப்பை பாணை சூடாக்குவதற்கு பாவிக்கக்கூடாது. சோறு சமைக்கும் அடுப்பை வேறு கறிகளை சமைப்பதற்காக பாவிக்கக்கூடாது.

  • சரியான சமையல் பாத்திரத்திற்கு சரியான எரிதிரியை இணைத்தல்

சரியான சமையல் பாத்திரத்திற்கு சரியான எரிதிரியை இணைத்தல்

  • எரிசுவாலை அளவுக்கதிகம் எரிவதைத் தவிர்த்துக்கொள்ளல்.

பாத்திரங்களின் இரு பக்கங்களிலும் எரிவாயு தீச்சுவாலைகள் அதிகளவு எரிவதால் சக்தி வீண்விரயமாகும்

  • பாத்திரங்களின் மூடிகளை மூடிவிடுதல்

பாத்திரங்களின் மூடிகளை மூடாமல் சமைப்பது அத்தகைய மூடிகளை மூடி சமைப்பதை விடவும் 3 மடங்கு சக்தியை நுகரும்.

இலகுவாக வெப்பத்தைக் கடத்தக்கூடிய உலோகப் பாத்திரங்களைப் பாவித்தல்.

  • LP எரிவாயு சமையல் அடுப்புகளில் துருப்பிடிக்காத உலோக சமையல் பாத்திரங்களைப் பாவித்தால், அதிகளவு வெப்பம் கடத்தப்படும்.

குறைந்தளவான நீரைப் பாவித்தல்.

  • உணவுகளை சமைப்பதற்கு குறைந்தளவான நீரைப் பாவித்தல். அதிகளவு நீர் கொதிக்க அதிகளவு வெப்பம் தேவை.

அதிக நேரம் வேகவைக்கக்கூடாது.

  • அளவுக்கத்திகம் உணவுகளை வேகவிடுவதால் சுவை கெடுவது மட்டுமல்ல சக்தியும் வீண்விரயமாகும்.

அடுப்பின் மூடியை மூடிவைத்தல்.

  • மூடிகள் திறந்திருந்தால் வெப்பம் பயனின்றி வெளியால் செல்லும்.

உணவுகளை மீண்டும் மீண்டும் சூடாக்குவதைத் தவிர்த்துக்கொள்ளல்.

  • எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உணவுகளை உண்ணுவது ஒரு குடும்பத்திற்கு மிக மகிழ்ச்சியான தருனம். இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளல். கூடுமானளவு ஒன்சேர்ந்து உணவுகளை உண்ணுவதற்குப் பகழகிக்கொள்ளல். இந்தப் பழக்கம் குடும்பத்திலுள்ள வித்தியாசமான அங்கத்தவர்களுக்கு வித்தியாசமான நேரங்களில் உண்ணுவதற்கு உணவுகளை சூடாக்கும் தடவைகளைக் குறைக்கும். அதனால் சக்தியையும் சேமிக்க முடியும்.

உரிய நேரத்தில் உணவுகளை உண்ணுதல்

உங்களின் உணவு உண்ணும் பழக்கத்தை புதிதாக்கிக்கொள்ளல்.

  • தூய பழங்களையும் மரக்கறி வகைகளையும். உண்ணுதல். குறைந்தளவு சக்தியை நுகரும் பாத்திரங்களிலிருந்து குறைந்தளவான சக்தி வீணாகும்.
  • பாரம்பரிய மண் பாத்திரங்களில் சோறு சமைப்பதை விடவும் சோறு சமைக்கும் மின் சமையலடுப்புகளில் சோறு சமைப்பது மிகவும் வினைத்திறன் வாய்ந்தது.
  • தானியங்களை இரவு நேரங்களில் ஊறவிடுதல். இதனால் காலையில் வேகுவதற்கு எடுக்கும் நேரம் குறையும்.
  • அழுத்த சமையலடுப்புகளில் சோறு சமைத்தால் அதிகளவு சக்தியை சேமிக்கலாம்.
  • அழுத்த சமையலடுப்புகள் 50 - 75% சக்தியை சேமிக்கும்.

கீழ்காணும் அட்டவணை ஒரு திறந்த பாத்திரத்தில் உணவு சமைப்பதற்கும் அழுத்த சமையலடுப்பில் உணவு சமைப்பதற்கும் நுகரும் காலத்தை ஒப்பிட்டுக் காட்டுகின்றது.

உணவுப் பொருள் திறந்த சமையல் பாத்திரம்
(நிமிடங்கள்)
அழுத்த சமையலடுப்பு
(நிமிடங்கள்)
உருளைக்கிழங்கு 50 8
முட்டை 30 6
சோறு 25 8
கடலை 90 25

 

நீங்கள் அழுத்த சமையலடுப்பை எவ்வாறு பாவிக்க வேண்டும்?

அழுத்த சமையலடுப்பை போதியளவு நீரினால் நிரப்புதல். அளவுக்கதிகமான நீரை நிரப்பக் கூடாது. மேலதிக நீர் கொதிக்க 50% வீதத்திற்கும் அதிக மின்சக்தி தேவைப்படும்.

உணவு வகைகளை தனித்தனியான தட்டுக்களில் பிரித்து வைத்தல்.

தனித்தனியான தட்டுகளை சமையலடுப்பின் உள்ளே வைத்து அடுப்பின் மூடியை மூடிவிடுதல்.

ஆவிப்போக்கியிலிருந்து படிப்படியாக ஆவி வெளியாகும் போது, அந்த ஆவிப்போக்கியில் பளு சாதனத்தை / ஊதியை பழுவாக வைத்தல்.

சில நிமிடங்களின் பின்னர், அழுத்த சமையலடுப்பு ஊதி சத்தமிடுவதற்குத் தொடங்கும். இது அடுப்பு சரியான அளவு அழுத்தத்தைப் பெற்றுள்ளது என்பதற்கு அறிகுறியாகும்.

தற்பொழுது வழங்கும் வெப்பத்தைக் குறைத்தல். ஆனால், அழுத்தத்தைப் பேணுவதற்கு போதியளவு வெப்பம் இருக்கின்றதா என்பதை உறுதிசெய்து கொள்ளல்.

அழுத்த சமையலடுப்பின் மூடியைத் திறப்பதற்கு முன்னர் அடுப்பை 10-12 நிமிடங்கள் வரை வெப்பம் தணியவிடுதல். வெப்பம் தணிந்தவுடன் வைத்த அந்தப் பளு சாதனத்தை அகற்றுதல். பின்னர், கைப்பிடியை தளர்த்துதல்.

சமையலடுப்பின் மூடியைக் கழற்றியெடுப்பதற்கு முன்னர், வைத்த அந்தப் பளு சாதனம் அகற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளல்.

அடியில் காற்று தெளிவாக புகுந்துசெல்லக்கூடிய வகையில் பழு சாதனத்தையும் புகைப்போக்கியையும் சுத்தம் (பற்குச்சைப் பயன்படுத்தி) செய்தல்.