Program:
குளிரூட்டல் மற்றும் குளிரூட்டும் நடபடிமுறை முதலியவற்றுக்கு ஹோட்டல்களிலும், புடவைத் தொழிற்சாலைகளிலும், வைத்தியசாலைகளிலும் பாரியளவான கட்டிடங்களிலும் குளிவிப்பான் அலகுகள் அண்ணளவாக 30% மின்சாரத்தை நுகர்கின்றன. பழைய, சக்தி வினைத்திறனற்ற குளிர்விப்பான்களுக்கு பதிலாக நவீன சக்தி வினைத்திறன் வாய்ந்த குளிர்விப்பான்களைப் பாவிப்பது அவசியம். இந்த ரெட்ரோஃபிட் இலங்கையிலுள்ள கேள்வி சார் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தில் ஒரு பிரதான அங்கமாக இனங்காணப்பட்டுள்ளது. இதனூடாக, 2020 ஆம் ஆண்டளவில் வருடாந்தம் 41 ஜி.வொ.ம. அளவான மின்சாரத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்டுள்ள ஆகுசெலவு 11,241 மில்லியன் ரூபாவாகும். இத்தகைய பிரதியீட்டு நடவடிக்கை, அரசாங்கத்தின் பிரதிநிதிகள், பட்டயப் பொறியியலாளர்கள், சக்திச் சேவைக் கம்பனிகள் (ESCos) முதலிய தரப்புகள் அடங்கலாக கருத்திட்ட முகாமைத்துவப் பிரிவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடங்களில் மேற்கொள்ளப்படும்.
முன்னேற்றம்:
குளிர்விப்பான் சேவைகள் பிரிவிலுள்ள சக்திச் சேவைக் கம்பனிகளுடன் (ESCos), ஒரு கூட்டம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி நடத்தப்பட்டது. இயக்கத்திலுள்ள குளிர்விப்பான் அலகுகளின் ஒரு பொருட்பதிவேட்டுப் பட்டியலைத் தயாரிக்கும் பொருட்டு ஏற்கெனவேயிருக்கின்ற குளிர்விப்பான் முறைமைகள் தொடர்பான தரவுகளை சேகரிப்பதற்கு, இந்தக் கூட்டத்தில் பல வழிமுறைகள் முன்மொழியப்பட்டன. இதே நேரம் சக்தி வினைத்திறன் வாய்ந்த குளிர்விப்பான் பொறித்தொகுதிகள் பற்றிய சம்பவ ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அதன் பின்னர், நடைமுறைப்படுத்துவதன் நிமித்தம் சக்தி வினைத்திறனற்ற குளிர்விப்பான்களை அவற்றின் பாவனையிலிருந்து கட்டம் கட்டமாக அகற்றுவதற்கும் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் என ஒரு கருத்திட்டப் பிரேரணை தயாரிக்கப்படும். கருத்திட்டத்திற்கு முந்தியகால அடிப்படை ஆய்வுகளுக்கு எதிராக கருத்திட்டத்திற்கு பிற்பட்டகால இயக்கச்செயற்பாட்டு நிலைகள் சான்றுபெற்ற சக்தி மதிப்பீட்டாய்வாளர்களினால் கண்காணிக்கப்படும்.