சக்தி வினைத்திறன் வாய்ந்த குளிர்சாதனப் பெட்டிகள்




Program:

குளிர்சாதனப் பெட்டிகள் ஒரு வீட்டில் சராசரியாக அதிகளவில் சக்தியை நுகரும் உபகரணங்களுக்கு இடையிலான பெரும் உபகரணங்களாகும். குளிர்சாதனப் பெட்டிகள் மின்சாரக் கட்டணத்தின் 50% வீதத்திற்கு காரணமாக அமைகின்றன. ஆகையால், பாவனைக்கொவ்வாதிருக்கின்ற குளிர்சாதனப் பெட்டிகளை அகற்றுவதற்குரிய ஒரு வர்த்தக அளவான திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஒரு சந்தைத் தலையீட்டு நடவடிக்கையினூடாக இலங்கையின் சந்தையிலிருந்து சக்தி வினைத்திறனற்ற குளிர்சாதனப் பெட்டிகளை அவற்றின் பாவனையிலிருந்து கட்டம் கட்டமாக அகற்றுவதற்கு உத்தேசிக்கப்படுகின்றது. வங்கிகள், மின்சார வசதியைப் பயன்படுத்தும் தரப்புகள், வர்த்தகர்கள் மற்றும் மின்சார வாடிக்கையாளர்கள் ஆகிய சகல தரப்புகளும் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலையமைப்பு ரீதியில் ஒன்றிணையும். வர்த்தகத் தரப்புகள் மின்சார வாடிக்கையாளர்களை குறித்த நிகழ்ச்சித்திட்டத்தில் ஈடுபடச்செய்யும். வர்த்தகத் தரப்புகள் குறித்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான நிதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வங்கிகளை அணுகும். கடன் வசதியை குறைந்த வட்டியில் பெற்றுக்கொள்ளலாம். வர்த்தகத் தரப்புகள் வாடிக்கையாளர்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகளை விநியோகித்த பின்னர், குளிர்சாதனப் பெட்டிகளின் செலவுக் கட்டணங்கள் மின்சார வசதிக் கட்டணத்தினூடாக தவணைக்கட்டணங்களின் அடிப்படையில் செலுத்தப்படும். கடன் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும். குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் மொத்த ஆகுசெலவு 3.5 பில்லியன் ரூபாவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக, 2020 ஆம் ஆண்டளவில் 161 ஜி.வொ.ம. மின்சாரத்தை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னேற்றம்:

குளிர்சாதனப் பெட்டிகளின் தெரிவுக்கான தகவுதிறனைத் தயாரிப்பதற்கான குளிர்சாதனப் பெட்டிகளைப் பரிசோதிக்கும் நடவடிக்கை தற்பொழுது NERD நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அக்கறையுடைய தரப்புகள் கூட்டமும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடத்தப்பட்டது. அக்கறையுடைய தரப்புகளுக்கு பெற்றுக் கொடுக்கும் பொருட்டு தற்பொழுது சந்தைத் திறமுறைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

உருப்படம் 01: அக்கறையுடைய தரப்புகளுக்கான வேலையரங்கு

Publications:

Laboratory:

Dashboard: