அரச நிறுவனங்களிலுள்ள சக்தி முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கான சக்தி வினை்ததிறன் மற்றும் சக்திப் பாதுகாப்பு பற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்




வரட்சியினாலும் மின்சார உற்பத்தியிலுள்ள குறைபாடுகளினாலும் நிகழ்ந்த மின்சக்தி நெருக்கடி நிலைமைகளின் காரணமாக, அரசாங்கம் அரச துறையில் சக்தி நுகர்வைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. SP/PCMD/6/2015 ஆம் இலக்க சுற்றறிக்கைகள் 2015 ஆம் ஆண்டு யூன் மாதம் 10 ஆம் திகதியும், 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் திகதியும் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டன. 2017 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 09 ஆம் திகதி மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சினால் அத்தகையதொரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சுற்றறிக்கை சகல அரச நிறுவனங்களும் தமக்கென்று ஒவ்வொரு சக்தி முகாமைத்துவ உத்தியோகத்தரை நியமித்துக் கொள்ள வேண்டும் எனவும், சகல நிறுவனங்களும் சக்தி நுகர்வைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதே நேரம் சக்தி பற்றி அறிக்கையிடப்படுதல் வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது. இந்த சுற்றறிக்கைகளின் அடிப்படையில், சக்தி முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு போதிக்கும் பொருட்டு சக்திக் கேள்வி சார் முகாமைத்துவம் பற்றிய ஜனாதிபதி சிறப்புச்செயலணியினால் ஒரு நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நிகழ்ச்சித்திட்டம் 200 எண்ணிக்கைக்கும் அதிகமான சக்தி முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் பங்குபற்றலில் 2017.05.23 ஆம் திகதி BMICH மண்டபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.