Green building (Commercial, Industrial)




Program:

மரபுரீதியான அதிகளவு கட்டிடங்களில் வாழ்க்கை வட்டம் முழுதிலும் அதிகளவான இயற்கை வளங்களும் சக்தி வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, சுற்றாடலுக்கு பாதகமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. பாரியளவான கட்டிடங்களை உள்ளடக்குகின்ற வர்த்தக மற்றும் கைத்தொழில் துறைகள் இலங்கையின் மின்சார நுகர்வில் 60% வீதத்தை நுகர்கின்றன. கட்டிடங்களில் குளிரூட்டல் மற்றும் காற்றோட்ட வசதிகளுக்கும் மின்னொளியேற்றலுக்கும் சக்தி பிரதானமாகப் பாவிக்கப்படுகின்றது. கட்டிடங்களில் நுகரப்படும் மின்சாரத்தை சிறந்த திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றினூடாக அதிகளவில் குறைக்க முடியும்.

சக்தி வினைத்திறன் கட்டிட விதிக்கோவை, கட்டிடங்களில் சக்தி வினைத்திறன் வடிவமைப்புகளையும் ரெட்ரோஃபிட்டையும் ஊக்குவிக்கும். இது, கட்டிடங்களிலுள்ள வடிவமைப்புகளிலும் ரெட்ரோஃபிட்டுகளிலும் சக்தி வினைத்திறனுக்கான நியமங்களை விதிக்கின்ற அதே நேரம் நியம அனுசரிப்பை நிர்ணயிப்பதற்கான முறையியல்களையும் முன்வைக்கும். நி.வ.அ.ச. ஏற்கெனவேயிருக்கின்ற 2000 ஆம் ஆண்டின் மின்சார சபை சக்தி வினைத்திறன் கட்டிட விதிக்கோவையை மீளாய்வு செய்து திருத்தியதன் மூலமாக இலங்கையிலுள்ள சக்தி வினைத்திறன் கட்டிடங்கள் தொடர்பில் 2008 ஆம் ஆண்டிற்கான செயன்முறை விதிக்கோவையை வெளியிட்டது. இந்த செயன்முறை விதிக்கோவை வர்த்தகக் கட்டிடங்கள், கைத்தொழில் வசதிகள், பாரியளவான வீடமைப்புக் கட்டிடத்தொகுதிகள் என்பவற்றுக்கு ஏற்புடையதாகும். கட்டிடக் கூறுகள், கட்டிட மூடுவசதிகள், காற்றோட்ட வசதிகள், குளிரூட்டல் முறைமைகள், மின்னொளியேற்றல், சேவை, நீர் சூடாக்கல், மின்சார மற்றும் மின்சக்திப் பகிர்ந்தளிப்பு என்பவற்றை உள்ளடக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயன்முறை விதிக்கோவை ஒரு தன்னார்வ அடிப்படையில் செயற்படுத்தப்பட்டது.

முன்னேற்றம்:

கட்டிட மூலப்பொருட்கள், தொழில்நுட்பங்கள், கட்டிட செயன்முறைகள் என்பன காலங்களினூடாகப் பரிணமித்து வருகின்றன. ஆகையால், உயர் தொழில்நுட்ப புத்தாக்கங்களின் பார்வையில், கட்டிட செயன்முறை விதிக்கோவை தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படுதல் வேண்டும். ஏற்கெனவேயிருக்கின்ற குறித்த செயன்முறை விதிக்கோவையை மீளாய்வு செய்து திருத்துவதற்கான ஒரு நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Publications: