10 மில்லியன் LED மின்குமிழ்களைப் பகிர்ந்தளித்தல்




EDSM பற்றிய PTF செயலணி சுமார் 3 மில்லியன் அளவான மின்சார வாடிக்கையாளர்களுக்கு 10 மில்லியன் LED மின்குமிழ்களைப் பகிர்ந்தளிப்பதற்கு ஒரு நாடளாவிய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளவு. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை இந்த ஆண்டு முடிவடைய முன்னர் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மாதாந்தம் 90 மின்சார அலகுகளை அல்லது அதற்குக் குறைந்தளவான மின்சார அலகுகளை நுகர்கின்ற மின்சார வாடிக்கையாளர்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நன்மைபெறுநர்களாவர். சக்தி வினைத்திறன் வாய்ந்த மின்னொளியேற்றல் மூலங்களை அறிமுகப்படுத்தி, வருடாந்தம் 100 ஜி.வொ.ம. மின்சாரத்தை சேமிப்பது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஒட்டுமொத்தக் குறிக்கோளாகும்.