குளிர்சாதனப் பெட்டிகள்




ஒருசில நேரம், பழைய குளிர்சாதனப் பெட்டி எப்பொழுதும் சிறந்ததாகவிருக்காது!!

அநேகமான குளிர்சாதனப் பெட்டிகள் குறிப்பாக அதி குளிர்விப்பான்கள் அதிகளவு மின்சாரத்தை நுகரக்கூடியவை.

நீங்கள் அறியாதிருக்கலாம், ஆனால் குளிர்சாதனப் பெட்டிகள் ஒரு சாதாரண குடும்பத்தின் 30-50 வரையான மின்சார அலகுகளை நுகர்கின்றன. ஆனால், அநேகமாக குளிர்சாதனப் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதில்லை. அந்தக் குளிர்சாதனப் பெட்டிகளில் சொற்பளவான நீர் தவிர அதிகளவான நீர் உள்ளடங்கியிருக்காது.

A few bottles of water

Dry fish – funnily enough to prevent cats getting at it

Sugar and other sweet things – to prevent them from ant attacks

Leftovers of cooked food

என்றாலும், இவையெல்லாம் குளிர்சாதனப் பெட்டியின் 10% வீதமான கொள்ளளவை நிரப்பிவிடும்!!

ஆதலால், சிறந்த குளிர்சாதனப் பெட்டியை தேடிப்பார்த்து வாங்குவது நல்லது.

உணவுப் பொருட்களிலிருந்து வெப்பத்தை அகற்றுவதற்கு குளிர்சாதனப் பெட்டிகள் இயந்திர வலுவை பயன்படுத்துகின்றன. இந்த வெப்பம் ஒரு குளிர்சாதனம் என அழைக்கப்படுகின்ற ஒரு திரவத்தினால் உறிஞ்சப்படுகின்றது. அந்தக் குளிர்சாதனம் ஒரு வட்டத்தில் சுழலும். அது வெப்பத்தை உறிஞ்சி வளியாக (வெப்பத்தின் ஒரு பகுதி ஒரு கன்டன்ஷர் சுருளினூடாக பரந்து செல்லும்) மாறும் . அதன் பின்னர் அந்த வளி ஒரு கொம்பிரஷரினால் ஒரு உயரழுத்த வாயுவாக அழுத்தப்படுவதால் ஒரு வெப்ப வாயுவாக மாறும். உறிஞ்சப்பட்ட வெப்பம் கன்டென்ஷர் சுருள்களினூடாக சுற்றாடலில் பரவும். அந்த வெப்பம் பரந்தவுடன் (அகற்றப்பட்ட) அந்த வாயு ஒரு திரவநிலை வாயுக் கலவையாக மாறி குளிர்சாதனப் பெட்டியினுள்ளும் மற்றும் அதி குளிர்விப்பானினுள்ளும் காணப்படும் குழாய்த் தொகுதிகளினூடாக மீளச்சுழலும். அந்தச் சுழற்சி குளிர்சாதனப் பெட்டி இயங்கிக்கொண்டிருக்கும் அளவுக்கு மீண்டும் மீண்டும் சுழலும்.

மிகச்சிறந்த குளிர்சாதனம் எது?

நவீன குளிர்சாதனப் பெட்டிகள், குறிப்பாக அதி குளிர்விப்பான்கள் 20 வருடங்களுக்கு முன்னர் வாங்கிய குளிர்சாதனப் பெட்டிகள் நுகரும் மின்சாரத்தில் ஏறக்குறைய 1/10 மடங்கு அளவான மின்சாரத்தை நுகரும்.

ஆகையால், உங்களிடம் மிகப் பழைய ஒரு குளிர்சாதனப் பெட்டி இருந்தால், புதிய ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்குவது நல்லது. வாங்குவதால் நீங்கள் பணத்தையும் மின்சாரத்தையும் சேமிப்பீர்கள்.

உங்கள் செயல்களில் கவனமாக இருங்கள்

சரியான அளவு குளிர்சாதனப் பெட்டியைத் தேர்ந்தெடுத்தல்

மிகப்பெரிய குளிர்சாதனப் பெட்டி பெருமளவு கொள்ளளவுடையதாகும் என்பதால் அதிகளவான மின்சாரத்தை நுகரும். கீழே தரப்பட்டுள்ள அட்டவணையைப் பாருங்கள்.

கொள்ளளவு சாதாரண நுகர்வு மாதாந்த அலகுகள் (கி.வொ.ம./மாதம்)
190
240

190 லீற்றர் கொள்ளளவுடைய ஒரு குளிர்சாதனப் பெட்டி ஐந்து நபர்களுள்ள ஒரு குடும்பத்திற்கு போதுமானதாகும்.

குளிர்சாதனப் பெட்டியின் கதவை மூடிவைக்க வேண்டும்

குளிர்சாதனப் பெட்டியின் கதவை திறந்துவைப்பதால் 10 - 20C பாகைக்கு இடைப்பட்ட அளவில் வெப்பமடையும்.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கின்ற நீரை நீங்கள் அருந்துகின்ற போது குளிர்சாதனப் பெட்டியின் கதவை திறந்துவைக்கக்கூடாது.

நேர்த்தியாக வைத்திருத்தல்

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடிய பொருட்களை ஒழுங்கு முறையாக வைத்தல். உறையக்கூடிய பொருட்களை குளிர்சாதனப் பெட்டியின் மேல் தட்டிலும், சமைத்த உணவுகளையும், பழங்களையும் அடுத்த தட்டிலும், மற்றும் மரக்கறி வகைகளை ஆகவும் கீழவுள்ள தட்டிலும் வைத்தல். நேர்த்தியான ஒரு குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களைத் தேடியெடுப்பது மிகவும் இலகு.

பாத்திரங்களை அல்லது கொள்கலன்களை உபயோகித்தல்

மரக்கறி வகைகள், பழங்கள் முதலியவற்றை… உங்களின் விருப்பத்திற்கு அல்லது உரிய நாளின் தேவைக்கு ஏற்றவிதத்தில் பாத்திரங்களில் அல்லது கொள்கலன்களில் இட்டு களஞ்சியப்படுத்தலாம். அங்குமிங்குமிருந்து ஏதாவதொன்றை பொறுக்கியெடுப்பதை பார்க்கிலும் சரியான நேரத்தில் சரியான பாத்திரத்திலிருந்து அல்லது கொள்கலனிலிருந்து தேவையான பொருட்களை பொறுக்கியெடுப்பது இலகு. உணவு வகைகளை மூடிய கொள்கலன்களில் இட்டு களஞ்சியப்படுத்த வேண்டும். இல்லையெனில், குளிர்சாதனப் பெட்டியிலுள்ள காற்று உணவிலிருந்து வரும் ஈரத்தன்மையை உறிஞ்சிவிடுவதால், உணவுகளின் தூய்மைத்தன்மை கெட்டுவிடலாம்.

திரவப் பதார்த்தங்களை மூடிய பாத்திரங்களில் இட்டு களஞ்சியப்படுத்தல்.

மூடிவைக்கப்படாத உணவு வகைகள், குறிப்பாக திரவப் பதார்த்தங்களின் ஈரளிப்பு நீர் குளிர்சாதனப் பெட்டியினுள் சேரும் என்பதால் அது கொம்பிரஷரை கடினமாக இயங்கச்செய்யும். இதனால் அதிக மின்சாரம் தேவைப்படும்.

சூடான உணவு வகைகளை குளிர்சாதனப் பெட்டியில் களஞ்சியப்படுத்தக்கூடாது

சூடான உணவு வகைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு முன்னர் அவற்றின் சூட்டை தணித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தல். மிகவும் சூடான உணவுகளை குளிராக்குவதற்கு கொம்பிரஷர் அதிகளவான சக்தியை இழக்கும்.

சூடு தணிந்த உணவுகளை பாவித்த பின்னர் உடனடியாக மீண்டும் வைத்தல்.

குளிரான உணவு வகைகளை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியால் எடுப்பதால் வெப்பமடையும். அதனால், அத்தகைய உணவு வகைகளை மீண்டும் குளராக்குவதற்கு குளிர்சாதனப் பெட்டி அதிகளவு இயங்க வேண்டும். அதனால் அதிகளவு மின்சாரம் நுகரப்படும்.

உறைநிலையை நீக்குதல்

அதிகம் உறைந்த உணவுப் பொருட்களை அதி குளிர்விப்பானிலிருந்து மாற்றி குளிர்சாதனப் பெட்டிக்கு அகற்றுதல். அந்த உணவு வகைகள் 10-12 மணித்தியாலங்களில் தானாக உறைநிலை அடையும். அதன் பின்னர் அவற்றை உபயோகிக்கலாம். அதி குளிர்விப்பானிலுள்ள குறைந்தளவான உணவு வகைகள் கொம்பிரஷருக்கு குறைந்த அளவான இயக்கத்தைத் தேவைப்படுத்தும். ஒரு சென்றி மீற்றர் கனமான ஒரு ஐஸ் படலம் படிகின்ற போது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அந்த ஐஸ் படலத்தை அகற்றுதல்.

குளிர்சாதனப் பெட்டியின் பீடின்களை (விழிம்பு) கவனித்தல்

குளிர்சாதனப் பெட்டியின் கதவு விழிம்புகள் சுத்தமாகவும் சரியான விதத்தில் மூடப்பட்டும் இருக்கின்றனவா என நிச்சயப்படுத்திக்கொள்ளல். வெகுவிரைவில் ஐஸ் கட்டிகள் படிவது என்பது விழிம்புகள் உரிய முறையில் கவனிக்கப்படுவதில்லை என்பதற்கு அறிகுறி. குளிர்சாதனப் பெட்டியின் கதவு ஓரமாகவுள்ள கசிவு இணைப்பிறுக்கி உறுதியாகவிருக்கின்றதா என நிச்சயப்படுத்திக்கொள்ளல். இதனைப் பரிட்சித்துப்பார்ப்பதற்கு, குளிர்சாதனப் பெட்டியின் கதவு இணைப்பிறுக்கிக்கும் குளிர்சாதனப் பெட்டிக்கும் இடையில் ஒரு காகிதத் துண்டை அல்லது ஒரு பத்து ரூபா நாணயத் தாளை வைத்து மூடுதல். பின்னர், அந்தத் தாளை இழுத்தெடுக்க முயற்சிக்கும் போது, அது கிழிந்துவிடும் என்ற அளவுக்கு கடினமாகவிருந்தால், அந்த இணைப்பிறுக்கி சிறந்த நிலையிலுள்ளது என்பது நிச்சயம். நாணயத் தாளை இலகுவாக இழுத்தெடுக்க முடியுமானால், அந்த இணைப்பிறுக்கியில் ஒரு கசிவு இருப்பது தெளிவாகும்.

சரியான காற்றோட்டம் இருக்கின்றதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளல்

குளிர்சாதனப் பெட்டியின் பிற்புற சுருள்களை சூழ சரியான காற்றோட்டம் இருக்கின்றதா என நிச்சயப்படுத்திக்கொள்ளல். பிற்புறப் பகுதியில் சுருள்களில்லாத குளிர்சாதனப் பெட்டிகள் இரு பக்கங்களையும், பிற்புறப் பகுதியையும் சூழ காற்றோட்டத்தைத் தேவைப்படுத்தும்.

குளிர்சாதனப் பெட்டியை சரியான இடத்தில் வைத்தல்

குளிர்சாதனப் பெட்டிகளை நேரடியாக சூரிய ஒளி விழுகின்ற இடத்தில்/வெப்பமான சூழலில் வைக்கக்கூடாது.

சுருள்களை சுத்தமாக வைத்திருத்தல்

சுருள்களில் தூசுகள் படிவதால் குளிர்சாதனப் பெட்டிகள் கடினமாக இயங்கி மின்சாரத்தை நுகரும்.

சரியான செட்டிங்ஸ் (அமைப்புகள்)

அதி குளிரை அவசியப்படுத்தும் பொருட்களை (உ+ம்: ஐஸ் கிறீம், இறைச்சி, மீன் முதலியன…) குளிர்சாதனப் பெட்டியில் இடுவதைத் தவிர்த்துக்கொள்ளல். ஆகக்குறைந்த சுமையை தாங்கிக்கொள்ளக்கூடிய விதத்தில் செட்டிங்ஸ்களை சரிபடுத்திக்கொள்ளல். அதி குளிரை அவசியப்படுத்தும் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படும் போது செட்டிங்ஸ்களை 40% அளவில்l (1 இற்கு 5 என்ற ஒரு அளவுத்திட்டத்தில் 2 இற்கும் 3 இற்கும் இடைப்பட்ட அளவு) பேணுதல்.

நீங்கள் வீட்டிலில்லாத நாட்களில், குளிர்சாதனப் பெட்டிகளை இயங்காமல் மூடிவிட்டு அல்லது ஆகக்குறைந்த ஒரு அளவுக்கு செட்டிங்ஸ்களை சரிபடுத்திவிட்டு போகலாம். இத்தகைய செயல் குளிர்சாதனப் பெட்டியின் உள்ளக வெப்பநிலையைப் பேண உதவுவதால் கொம்பிரஷர் உறைநிலையை அகற்றும் பொருட்டு இயங்க வேண்டிய தேவை ஏற்படாது.

கழிவுகளை அகற்றுதல்

உண்மையாக தேவையானவற்றை மாத்திரம் களஞ்சியப்படுத்துதல். இனிப்புப் பண்டங்களையும் கருவாடுகளையும் இடுவதற்கு ஒரு குளிர்சாதனப் பெட்டி அவ்வளவு உகந்ததல்ல.

குளிர்சாதனப் பெட்டிகளை உகந்த இடங்களில் வைத்தல்

சமையல் உபகரணங்கள் மற்றும் ஏனைய வெடிபாத்திரங்கள் இருக்கும் இடத்தில் வைக்கக்கூடாது.