ஸ்மார்ட் ஹோம்ஸ்




Program:

தற்போதைய சக்தி நிலவரத்திற்கு இணங்க, வீட்டுத் துறை தேசிய மின்சார நுகர்வில் 38% வீதத்திற்கு காரணமாக அமைகின்றது. அதிகளவான தற்கால நவீன வீடுகள் வாழ்க்கை வட்டம் முழுதிலும் அதிகளவு இயற்கை வளங்களையும் சக்தி வளங்களையும் பயன்படுத்துகின்றன. சக்தி வினத்திறன் வாய்ந்த மின்னுபகரணங்களின் பாவனைக்கும் சக்தி நிலைபெறுதகுதன்மைக்குமான வடிவமைப்புத் திறமுறைகளை எண்ணகருவாக உருவாக்குகின்ற வதிவிடங்களின் வடிவமைப்புத் திட்டங்களுக்கு ஈடுகொடுக்கும் சரியான காலநிலையானது பச்சை வீட்டு வாயுத் துணிக்கைகள் குறைவின் காரணமாக உள்ளூர் ரீதியிலும் பூகோள ரீதியிலும் சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளை கணிசமானளவு தணிக்கும்.

ஆதலால், பெரும்பான்மையான வதிவிடம் சார்ந்த வடிவமைப்புத் திட்டங்கள் உள்நாட்டுக் காலநிலைக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஆற்றலற்றதாகக் காணப்படுகின்றன. நிலவுகின்ற காலநிலையுடன் முரண்பட்டுள்ள வடிவமைப்பு சார்ந்த சிக்கல்கள் உட்புறங்கள் வெப்பமாகுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. இதனால் உள்ளக ரீதியில் குளிரையும் சௌகரிகத்தையும் ஏற்படுத்துவதற்கு அதிக மின்சாரம் தேவைப்படுகின்றது. வதிவிடங்களில் காணப்படும் அளவுகளில் வித்தியாசப்படுகின்ற இந்த நிலை அதிகளவு சக்தி வீண்வீரயத்திற்கும் அதே நேரம் அனல் ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்ற சக்தியில் கணிசமானளவு தங்கியிருப்பதற்கும் காரணமாக அமைகின்றது. ஆதலால், ‘நிலைபெறுதகு சக்தி வதிவிடத்திற்கான’ ஒரு வழிகாட்டியை அறிமுகப்படுத்தி அந்த வழிகாட்டலை நடைமுறைப்படுத்துவது மிக முக்கியமாகும். இது தவிர, வீட்டுக் கூரைகளில் நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி PV முறைமைகளில் ஒருமுகப்படுகின்ற குறித்த ஸ்மார்ட் ஹோம் முன்னெடுப்புத் திட்டம் 2020 ஆம் ஆண்டளவில் 139.2 ஜி.வொ.ம. மின்சார வீண்விரயத்தைக் குறைக்கக்கூடும். அத்துடன், இது பகல் நேரத்தில் க்றிட் மின்சார உற்பத்தியில் 100 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறன் வித்தியாசத்திற்கும் வழிவகுக்கும். 2016-202 எனும் ஐந்து ஆண்டுகளுக்கு தவிர்க்கப்படும் மின்சக்தியின் தற்போதைய தேறிய பெறுமானம் 591 ஜி.வொ.ம. என்ற அளவில் காணப்படும். அடுத்து வரும் இருபது ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, இந்த மின்பிறப்பாக்கிகளிலிருந்து வரும் சமப்படுத்தப்பட்ட சக்தி ஆகுசெலவு ரூ. 21-25 கி.வொ.ம. என்ற அளவில் காணப்படும்.

இது தவிர, வீட்டுக் கூரைகளில் நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி PV முறைமைகளில் ஒருமுகப்படுகின்ற குறித்த ஸ்மார்ட் ஹோம் முன்னெடுப்புத் திட்டம் 2020 ஆம் ஆண்டளவில் 139.2 ஜி.வொ.ம. மின்சார வீண்விரயத்தைக் குறைக்கக்கூடும். அத்துடன், இது பகல் நேரத்தில் க்றிட் மின்சார உற்பத்தியில் 100 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறன் வித்தியாசத்திற்கும் வழிவகுக்கும். 2016-202 எனும் ஐந்து ஆண்டுகளுக்கு தவிர்க்கப்படும் மின்சக்தியின் தற்போதைய தேறிய பெறுமானம் 591 ஜி.வொ.ம. என்ற அளவில் காணப்படும். அடுத்து வரும் இருபது ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, இந்த மின்பிறப்பாக்கிகளிலிருந்து வரும் சமப்படுத்தப்பட்ட சக்தி ஆகுசெலவு ரூ. 21-25 கி.வொ.ம. என்ற அளவில் காணப்படும்.

Progress:

Publications: