காற்றோட்ட வசதியும் உஷ்ண சௌகரிகமும்




எளிதாக வாழ்வது என்பது உணர்வுபூர்வமாக இருப்பதாகும்!

உங்களுடைய வீடுகளை சூழ நீங்கள் வளர்க்கும் மரங்கள் தாவரங்கள் என்பன அதிகளவான வெப்பத்தை உருஞ்சி வெப்பநிலையைக் குறைக்கும். வாய்ப்பு அவ்வாறிருக்கின்ற போது, நாம் மின்விசிறிகளுக்கும் குளிரூட்டிகளுக்கும் ஏன் அதிக பணம் செலுத்தி அவற்றை வாங்க வேண்டும், புத்திசாதுர்யமாக இருக்க வேண்டும். உங்களுடைய வீடுகளை சூழ, மரங்களை நடுதல் உங்களின் மின்சாரக் கட்டணத்திற்கான செலவைக் குறைக்கும்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை,

குளிரூட்டிகளை மிதமிஞ்சி பாவிக்காமல் ஓரளவு பாவித்தல். இடங்களை வெப்பம் தணித்து குளிராக வைத்தல். குளிரூட்டியில் 260C பாகை வெப்பநிலையை பேணுவது உகந்தது.

ஒரு குளிரூட்டி என்பது இன்சியுலேஷன் பெட்டியை தணிக்கின்ற ஒரு குளிர்சாதனமாகும். இது குளிரை வழங்குவதற்கு ஒரு குளிர்சாதனத்தின் வெளிச்செல்லும் குளிரை பயன்படுத்துவதால், அறைகளை சௌகரிகமாக வைத்திருக்க உதவும்.

குளிரூட்டியிலுள்ள கொம்பிரஷர் குளிராக்கும் சாதனத்தை அழுத்துவதால் வெப்பமான உயரழுத்தமுடைய வளி (வரைபடத்தில் காட்டப்பட்டவாறு சிவப்பு நிறத்தில்) உருவாகும்.

இந்த வெப்பமான வளி ஒரு வெப்பமான திரவ குளிராக்கியினுள் விரிந்தும் சுருங்கியும் ஊடுருவி சுருள்களினூடாக (கொன்டென்ஷர்) செல்லும்.

வெப்பமான திரவ குளிராக்கி ஒரு விரிவான வால்வினூடாக இயங்கி குளிர்வாங்கி குளிராகி குறையழுத்த திரவ வாயுக்களின் கலவையாக (வரைபடத்தில் காட்டப்பட்டவாறு இளம் நீலநிறம்) மாறும்.

குளிரான குளிராக்கி சாதனம் சுருள்களினூடாக (ஆவியாக்கி) இயங்கி வெப்பத்தை உறிஞ்சுவதால், உள்ளிருக்கும் வளி குளிராகி கட்டிடம் குளிரடையும்.

ஒரு குளிரூட்டியை இயங்கச்செய்ய முன்னர் பல தடவைகள் தடவைகள் சிந்திக்க வேண்டும். மின்விசிறியைப் பாவியுங்கள். தவிர்க்க முடியாது கட்டாயம் தேவையென்றால் மாத்திரம் குளிரூட்டியை பயன்படுத்துங்கள்.

வெப்ப சரிபடுத்தியை 260C பகையில் பேணுதல். வெப்பநிலையிலுள்ள மேலதிக 1C பாகை வித்தியாசம் குளிராகுவதற்கு 4% மேலதிகமாக சத்தியை நுகரும்.

மின்விசிறிகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் பயன்படுத்தப்பட்டால் நீங்கள் மின்விசிறிகளின் வெப்நிலையை அதிகரிக்கலாம்.

உங்களின் தேவைக்கு ஏற்ற விதத்தில் திட்டமிடக்கூடிய ஒரு ப்ரோகிராமரை நிறுவுதல்.

வடிகட்டிகளை சுத்தமாக வைத்திருத்தல். தூசுபடியும் இடங்களை/துவாரங்களை சுத்தம் செய்தல். அடைத்திருக்கும் வடிகட்டிகள் காற்றோட்டத்தைக் குறைத்து கொம்பிரஷர்களை கடுமையாகத் தொழிற்படச் செய்யும் என்பதால் அதிகளவு மின்சாரம் தேவைப்படும்.

குளிரூட்டி முறைமை இயங்கும் நேரத்தில் அறையின் கதவுகளை/யன்னல்களை மூடிவைத்தல் வேண்டும். யன்னலில்படும் நிழல், பகல் நேரத்தில் வரும் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் குறைக்கக்கூடும்/கட்டுப்படுத்தக்கூடும்.

கட்டிடத்தின் அதிகளவு நிழலுள்ள இடங்களில் யன்னல் அலகு குளிரூட்டியை நிறுவிக்கொள்ளல். குளிரூட்டி அலகுக்கு படக்கூடிய சூரிய ஒளியைத் தடுத்து நிழல் தருவதற்கு வீடுகளை சுற்றி மரங்களை வளர்த்தல்.

சுவரிலுள்ள வெடிப்புடைய/உடைந்த யன்னல்கள், மின்சார வெளிச்செல்வழி சாதனங்கள் மற்றும் ஆளிகள் என்பவற்றை கவனித்து அவற்றை திருத்தி சிறந்த நிலையில் பேணுதல். சுவர்களினூடாக ஊடுருவிச்செல்கின்ற ஈயக்கம்பியிணைப்பு, குழாய் பொருத்துக்கள் மற்றும் மின்சாரக் கம்பியிணைப்பு முதலியவற்றில் கசிவுகள் இருந்தால் அத்தகைய கசிவுகளை மூடிவிடுதல்.

மின்விசிறிகள்

கூரை மின்விசிறிகளின் பாவனையைக் குறைத்தல். கூரை மின்விசிறிகள் நிறுத்திவைக்கக்கூடிய மின்விசிறிகளை அல்லது மேசை மின்விசிறிகளை விடவும் அதிகளவு மின்சாரத்தை நுகரும்.

உங்களுடைய மின்விசிறிகளை நன்றாக இயங்கக்கூடிய நிலையில் வைத்திருத்தல். மின்விசிறிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் உற்பத்தித் தரப்புகளின் சிபாரிசுகளை மதித்து பின்பற்றுதல்.

உங்களுக்கு நேடியாக மிதமான காற்று படக்கூடிய விதத்தில் மின்விசிறியை வைத்தல்.

நீங்கள் அறிந்திருந்தீர்களா?

நிலக்காட்சிப்படுத்தல் உங்களின் வீடுகளை குளிராக வைத்திருப்பதற்கும் நீங்கள் சௌகரிகமாக வாழ்வதற்கும் உதவக்கூடிய ஒரு இயற்கையான அழகான வழிமுறையாகும். நிழல்களை தரக்கூடிய விதத்தில் சரியான முறையில் மரங்களை நடுதல். அத்தகைய மரங்கள் சாதாரணமாக ஒரு குடும்பத்தின் மின்சார நுகர்வில் 25% வீதம் வரை சேமிக்க உதவலாம்.