சக்தி வினைத்திறனற்ற குளிர்சாதனப் பெட்டிகளை அவற்றின் பாவனையிலிருந்து கட்டம் கட்டகமாக அகற்றுதல்




இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2017 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது, குளிர்சாதனப் பெட்டிகளுக்கான ஆகக்குறைந்த சக்திச் செயல்திறன் தகவுதிறன்கள் உரிய நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

குளிர்சாதனப் பெட்டிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அவர்கள் பெறும் குளிர்சாதனப் பெட்டிகளை பரிசோதித்துக் கொள்ளுமாறும் அதற்கிணங்க அவற்றுக்கு முத்திரையிடுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். குறித்த நியமங்களை அனுசரிக்கும் குளிர்சாதனப் பெட்டிக்ள மாத்திரமே இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் கருத்திற்கொள்ளப்படும்.

சக்தி வினைத்திறனற்ற குளிர்சாதனப் பெட்டிகளுக்கு பதிலாக வினைத்திறன் வாய்ந்த குளிர்சாதனப் பெட்டிகளைப் பாவிப்பதன் மூலம் வருடாந்தம் 160 ஜி.வொ.ம. மின்சாரத்தை சேமிப்பது குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஒட்டுமொத்தக் குறிக்கோளாகும்.